உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

15




தெளிவுரை : முழங்கும் கடலலைகளாலே கொழித்து இடப்பெற்ற, பெரிய மணல்மேட்டிலே நிற்கின்றது, பெரிய தாளையுடையதான தாழை. அத் தாழையினது, முள்ளுடைய நெடிய கிளையினிடத்தேயுள்ள அகமடற்கண்ணே, முகை யானது, தான் முதிர்தலாலே கட்டவிழ்ந்தது. அதுதான் சங்கு நீண்டாற்போன்ற தோடுகளாலே மூடப்பெற்ற, வெண்பூவாகவு மானது. மோதுகின்ற அலையினது தாக்கு தலாலே அப்பூத்தான் சிதைவுற்றுத் தாது உதிர்ந்தும் போயிற்று. அதனின்றும் எழும் நறிய மணத்தாலே, அதுதான் சிறிய குடியிருப்பையுடைய பாக்கத்துத் தெருக் களிலுள்ள புலால் நாற்றத்தைப் போக்கும். அத்தகைய தாழை மணம் கமழுகின்ற கானற்சோலையிலே ஏற்பட்டது நம்முடைய காதல் உறவு. இவ் உறவானது, ஒருநாள் தலைவனைக் காணாதே போயினும், அதன்பின் உய்தல் அரிது என்னும் தன்மையது. இதன் உண்மையைக் கருதாமல், விரைந்த செலவையுடைய குதிரைகள் பூட்டிய நம் காதலரது நெடிய தேரினது வரவைத், தாம் தூற்றிய அலருரைகளாலே, அவன் ஊரிலேயே அழுங்கச் செய்தனர் நம் ஊரவர். அத் தவற்றோடும் அமையாதாராய், இவ் ஆரவாரத்தையுடைய ஊரவர், அவரைப் பிரிந்ததனா லுண்டாகிய நம் மெலிவுகண்டு வருத்தங்கொண்டு இரங்குதலும் உடையராயினரே! துதான் எதனாலோ தோழீ?

தெள்ளித்

சொற்பொருள்: கொழீஇய - கொழித்த தூற்றிய. மூரி எக்கர் - பெரிதுயர்ந்த மணல்மேடு.கொஞ்சங் கொஞ்சமாக மணல் சேரச்சேரத் தான் உயர்வதுபற்றி 'எக்கர்' என்றனர். தடந்தாள்-பெரியதாள்; தாள்-அடிமரப் பகுதி. அகமடல்-மடலகத்து உள்ளிடப் பகுதி. பொதுளிய - பூத்துத் தோன்றிய. முகை-மொட்டு. முதிர்பு-முதிர்ச்சி பெற்று. அவிழ்தல் - கட்டவிழ்தல். கோடு-சங்கு. வார்தல். வளர்தல். தோடு-புறவிதழ். உதைத்தலின்-மோதித் தாக்கு தலினால். சிறுகுடிப் பாக்கம்-சிறுகுடியாகிய பரதவர் பாக்கம். பாக்கம்-கடற்கரை சார்ந்த ஊர். மறுகு - தெரு. புலால்- புலால் நாற்றம்; மீனுணங்கப் போடலால் உண்டாவது. கானல் - கடற்கரைக் கானற்சோலை. கேண்மை - நட்புறவு. கழியினும் - வாராதே கழிந்தாலும், உய்வு - உயிர் பிழைத்தல். கதழ்வு-விரைவு. ஆண்டு- அவ்விடத்தே; அவர்தம் ஊரிடத்தே. தப்பல் - தவறு. உயவு - மேனி மெலிவு; இது தலைவனைப் பிரிதலால் வந்தது. அழுங்கல் ஊர்-அலருரைத்து

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/21&oldid=1637155" இலிருந்து மீள்விக்கப்பட்டது