பக்கம்:வாழ்க்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வாழ்க்கை


தாகும் அன்பே இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய துன்பங்கள் துயரங்களைக் காட்டிலும், இந்தப் போலி அன்பினால் அதிகத் தீமைகள் விளையும்.

பாரபட்சமான அன்பு - சிலரிடம் மட்டும் அன்பு வைத்தல் - வாழ்வின் சிக்கல் எதையும் தீர்ப்பதில்லை. ஏனெனில், மனிதர் தங்கள் சுய நலத்திற்காக நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தை அது நிறுத்துவதில்லை; மரணத்திலிருந்தும் காப்பதில்லை. அதனால் வாழ்வு அதிக இருள்மயமாகிறது; வாழ்க்கைப் போராட்டம் அதிகரிக்கிறது. தனி மனிதனின் இன்ப வேட்கை பெருகுகிறது; மரணபயன் அதிகமாகிறது.

மிருக இயல்பே வாழ்க்கை என்று கொள்பவன் தன் மிருக இயல்பின் நன்மை அதிகரிப்பதற்குத் தேவையானவைகளைத் தேடுவதில் தன் நேரம் முழுவதையும் செலவழிக்கிறான்; செல்வங்களைத் தேடிப் பாதுகாக்க விரும்புகிறான்; தன் இன்பத்திற்காக மற்றவர்களுக்கு உதவிபுரிகிறான்; தன் நலத்திற்கு அதிகமாக உதவி செய்தவர்களுக்குத் தானும் அதிக உதவிகள் செய்கிறான். அவன் வாழ்க்கையே மற்றவர்களின் உதவிகளால் நடக்கும்போது, அவன் தன் வாழ்க்கையை எப்படித் தியாகம் செய்வான்?

அவன் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வதற்கு, முதலாவது தான் மற்றவர்கள் மூலம் தேடி வைத்திருக்கும் பொருளைத் துறக்க வேண்டும்; அது முடியாத காரியம்; பிறகு தன்னோடு வாழும் மக்களில் எவர்களுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால், அவன் அன்பு செலுத்துவதற்கு முன்னால், அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/111&oldid=1122191" இலிருந்து மீள்விக்கப்பட்டது