器 கள்ளுணர் சொல்லமுதம் நாடாக என்றே தவின்றருளிஞர் திருவள்ளுவர். நாட்டிற்கு அமைய வேண்டிய நல்லியல்புகள் எல்லா வற்றையும் வள்ளுவர் தமது நூலில் நாடு என்த அதிகாசத்தில் விசித்துரைத்துள்ளார். தாட்டில் என்றும் குன் ருத விளேச்சல் இருத்தல்வேண்டும். செந்தண்மை பூண்ட அந்தளுளரும் முற்றுந் துறந்த முனிவசரும் வாழ்தற்கு இடமாக நாடு திகழவேண்டும். கொடுக்கக் குறையாத செல்வப் பெருக்கமும் இருக்கவேண்டும். கலத்தினும் காலினும் சென்று அரும்பொருள் ஈட்டிவரும் பெருவணிகர்க்கு உறைவிடமாக ஒளிரவேண்டும். பிற நாட்டவரும் அடைய விரும்பும் அளவிறந்த பெரும் பொருளைப் பெற்றிருக்கவேண்டும். பெருமழையாலோ மழையின்மையாலோ கேடுருத நாடாகத் திகழவேண்டும். அண்டை நாட்டு அரசர்தம் வெறுப்பிற்கு உள்ளாகாத நாடாக விளங்கவேண்டும். அயலே அமைந்த நாடுகளில் வாழ்வார் ஒருகால வறுமையால் வாடித் தன் கண் நாடி வந்தால் அவ் அயலவரைத் தாங்கும் பாங்கும் அமையவேண்டும். இறைப் பொருள் முழுதையும் முழுமனத்துடன் மன்னர்க்குக் கொடுத்து அரசினைப் பேணும் குடிமக்கள் அந் நாட்டில் வாழவேண்டும். மிக்க பசியும், மெலிவிக்கும் நோய்களும், புறத்தே இருந்து புன்கண் செய்யும் பகையும் நாட்டில் இருத்தல் கூடாது. கொள்கையால் மாறுபட்ட பல்வேறு குழுவினர். உடனிருந்தே அரசினை அகலத்து உலக்கும் உட்பகையாளர், வேந்தனை அழித்தற்கு வேளையை எதிர் நோக்கும் கொல்வினைக் கொடியராய குறுநில மன்னர் ஆகியோர் நாட்டில் இருத்தல் தகாது. இத்தகைய நல்லியல்புகள் எல்லாம் ஒருங்கமைந்து ஆகைவரால் கெடுக்க முடியாத பெருக்கமான வளமும்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/8
Appearance