பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492


முண்டகக் கானலுட் கண்டேன்' - என வருகின்றது. இடச்சூழல் கருதி இங்கு முண்டகத்திற்குத் தாழை என்று பொருள் கொள்வர். மற்றெங்கும் தாழைப் பொருளில் முண்டகப் பெயர் இல்லை. எனவே, முண்டகமும் தாழைக்கு மட்டும் உரிய பெயர் அன்று. அடுத்துக் கண்டல்’ என்னும் பெயர் தாழைக்குக் குறிக்கப் பட்டுள்ளது. நற்றினையில் பல இடங்களில் இச்சொல் பயின்று வரும். அங்கெல்லாம் அதன் உரைகாரர் பின்னத்துரர் நாராயண சாமி அவர்கள் கண்டல் ஒரு மரம்' என்ற தாழையினும் வேறு பட்ட ஒரு மரமாகப் பொருள் எழுதியுள்ளார். அவர் அவ்வாறு கருதக் கரணியம் இது போலும் கண்டல் சூழ்ந்த இடங்களைக் கூறும் பாடல்கள், "கண் டல் வேலிக் காமர் சிறுகுடி’ (நற் ! 14 : 191 : 5) "கண் டல் வேலி அவன்ஊர்' (நற் : 74 : 10) 'கண்டல்வேலிக் கழிநல்லுர்' (நற்: - 372 : 13) 'கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை' (நற் : 207) 'கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை' (நற் : 363 : 1) -என்றெல்லாம் கண்டல் வேலியாக அமைந்துள்ளதையும், அவ்வேலி அமைந்த இடங் களை ஊர், சிறுகுடி, படப்பை என்று பிற நிலப் பெயர்களால் குறிப்பதையும் கொண்டதைக் கருத்திற் கொண்டதாகலாம். மேலும் மேற்காணப்பட்ட பாடல்கள் யாவும் உலோச்சனார் ஒரு வரால் பாடப்பட்டவை. பிற நிலச் சொற்கள் அமைக்கப்பட்டிருப் பினும் அச்சொற்கள் பொதுவாகவும் அமைபவைதாம். தாழையும் வேலியாக அமையும். “... ... - - கொழுமடல் தாழை மாலை வேல் நட்ட வேவியாகும்' ! - -எனத் தாழை வேலியை மாலை மாறனார் காட்டினார். தாழையின் மறுபெயராகிய கைதைப் பெயரிலும் வேலி கூறப்பட்டது (சிவ. சி :546 :2) - 1. குறு 245 : 3, 4,