பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496


- தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்திருக்கும் தோற்றம் தலை விரித்த பேய்போன்றதாம். இப்பசிய தாள்கள் இருபுறமும் விரிந்து வளைந்துள்ள தோற்றம், "உருகெழு யானை உடைகொண் டன்ன" -எனயானைக்கு மேலிட்ட உடைப்போர்வை போன்றது எனப்பட்டது. அடிப் பகுதி சருச்சரை கொண்டது. பல்போன்று முள் கொண்ட நீண்ட பூமடல்' -என்கின்றது இவ்வண்ணனை. இத்தாழையை அடி முதல் நுனிவரையாகும் விளக்கங்களைப் பல இலக்கியங்கள் காட்டுகின்றன. . அடிப்பகுதி சருச்சரையுடன் சற்று நீல நிறத்தது. விழுது கள் கொண்டது; வளைந்தது என்பனவற்றை எட்டுத்தொகை நூல்கள் பேசுகின்றன. இதன் பசிய மடல், 'முள் இலைத் தாழை' (நற்: 335 : 5 ; 19 : 2) "முட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை' - (மு.கோவை : 51: 11) -என்றெல்லாம் இலையாகக் கூறப்பட்டுள்ளது. இலை இதற்கு மரபுப் பெயர் அன்று. தாள், ஒலை, ஏடு, தோடு, மடல் இவை களே உரிய மரபுச் சொற்கள். இருப்பினும் பூவின் இதழ் மடல்’ என்று குறிக்கப்படும். பூவிற்கும் பசிய தாளுக்கும் வேறுபாடு தோன்றவே இலை என்று பாடினர். இவ்வோலை ஓரங்களில் முள்ளைக் கொண்டது. இஃது எயிறு எனப்பட்டது. வளைந்து இருந்ததால் "கூன் முள்" எனப்பட்டது. இருபக்க ஓரங்களிலும் வரிசையாக இம்முள் அமைந்தமை கொண்டு சுறா மீனின் கோடும்,? “வாள்போல் வாய' "அரவுவாள் வாய்' (நற் : 235) என ஈர்வாளும் உவமை யாக்கப்பட்டன. தாழையின் அரும்பு வெண்மையாகத் திரண்டு முனை கூர்மையாகக் தோன்றுவதனால், 1 தம் 1991 குறுந் 245 :