இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
305
இலை | : | கூட்டிலை, சிற்றிலைகள் அகன்று நீண்டிருக்கும் (1-2" X .5-.75") விளிம்பு மேற்புறமாக வளைந்திருக்கும். இலைக் காம்பின் நடுநரம்பிற்கு அடியிலுள்ளது மிகப் பெரியது. அடிப்புறத்தில் மென்மையான வெள்ளிய நுண் மயிர்கள் உள்ளன. அதனால் வெண்ணிறம் போலத் தோன்றும். |
மஞ்சரி | : | கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாகப் பூக்கும். இதன் இணரை ‘ஹெட்’ என்பர். மஞ்சரிக் காம்பு உள்ளது. |
மலர் | : | பளபளப்பானது. மங்கிய வெண்ணிறமானது. மலரடிச் செதில்கள் 2 உள்ளன. |
புல்லி வட்டம் | : | புனல் வடிவானது. மேற்புறத்தில் 5 பிளவுகளை உடையது. |
அல்லி வட்டம் | : | புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் பிரிந்தவை. |
மகரந்த வட்டம் | : | எண்ணற்ற மிக நீண்ட பசுமையான தாதிழைகள் அடியில் ஒரு கொத்தாக இணைந்திருக்கும். பூத்த மலரில் இவை அகலமாக விரிந்து பட்டிழைகள் போன்று அழகாகக் காணப்படும். நுனியில் சிறிய மகரந்தப் பைகளை உடையன. மெல்லிய நறுமணம் வீசும். |
சூலக வட்டம் | : | ஓரறைச் சூலக அறையில் பல சூல்கள் உண்டாகும். |
கனி | : | இதன் காய் நீளமானது. பட்டையானது. பசுமையானது. முற்றிய நெற்று வெள்ளிய வைக்கோல் நிறமானது. இலைகள் உலர்நத பின் நெற்றுகள் மட்டும் இருக்கும். |
இதன் பட்டையும், மரமும் கரும் பழுப்பு நிறமானவை. மரம் வலியது. பலகை கட்டடங்களுக்குப் பயன்படும்.
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=26 என பட்டீல் ஆர்.பி (1958) கணித்துள்ளார்.
73-20