பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

market

74

mass


market forces – அங்காடி ஆற்றல்கள்: வழங்காற்றலும் தேவை ஆற்றலும்

marketing - அங்காடியாக்கம் : ஒரு நிறுமத்தின் விலை பொருள்களுக்கான நுகர் தேவையை இனங்காணலும் மிகுதியாக்கலும் அமைதிப்படுத்தலுமாகும். இதில்பின் வருஞ்செயல்கள் உள்ளன: தேவை மாற்ற எதிர்ப்பு, விளைபொருளை உயர்த்தல், சந்தைத் தேவை விலை, விற்பனைப் பின்பணி

marketing mix – அங்காடியாக்கக் கலப்பு: தன் விளை பொருள்களை நுகர்வோர் வாங்குவதற்கேற்ற காரணிகளை ஒரு நிறுமம் கட்டுப்படுத்தல். இதன் நான்கு பகுதிகளாவன: 1) விளைபொருள்: தன்மை, வாணிபக்குறி, சிப்பமாக்கல் 2) விலையிடல்: சில்லரை விலை, பெருங்கட்டளைகளுக்குக் கழிவு, கடன் வசதி 3) உயர்த்தல்: உயர்வு 4) இடம்: விற்குமிடம்

marketing plan – அங்காடியாக்கத் திட்டம்: சந்தைக் குறிக்கோள்களை அடையச் சந்தையாக்கக் கலப்பைப் பயன்படுத்தல்

market price - அங்காடி விலை:

1) ஒரு கச்சாப்பொருள், விளைபொருள், பணி, ஈடு ஆகியவற்றின் விலை

2) பணத்திற்காகவோ பிறஒன்றுக்காவோ சந்தையில் பண்டங்கள் மாற்றிக்கொள்ளக்கூடிய பொருளாதாரக் கருத்து

market value - அங்காடி மதிப்பு: திறந்த சந்தையில் அதன் நடப்பு விலையில் ஒரு பொருளை விற்கும் பொழுது உண்டாகும் மதிப்பு

Marxist economics – மார்க்ஸ் பொருளியல்: தொன்மைப் பொருளாதாரத்தின் ஒரு பிரிவு. காரல் மார்க்ஸ் (1818-83) என்பார் உருவாக்கியது. இதன் தனிச் சிறப்பு, பொருளியல் கருத்துக்கு வலுவான அரசியல் மணம் சேர்த்ததாகும். பொருளியல் மதிப்பின் தலைவாய் உழைப்பு என்பது ஆதம் சிமித்தின் கருத்து. இதை விரிவுபடுத்தி மார்க்ஸ் கூறினார். பிழைப்பூதியக் கூலி மட்டும் கொடுத்து உற்பத்தி முறை மூலம் தொழிலாளர்களிடமிருந்து முதலாளிகள் மீமதிப்பைப் பெறுகின்றனர் என்பது இவர் தம் மையக் கருத்து. இவர் தம் சிந்தனை இவர் எழுத்துகளுக்குப்பின் வளர்ந்தது குறைவே. அதன் சிறப்பிலும் பின்னடைவு ஏற்பட்டது

mass media – மக்கள் ஊகங்கள்: மக்களை ஊடுருவிச்