பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

man

73

market


வேலையின் அளவு, ஒரு வேலையின் அடக்கச் செலவைக் கணக்கிடப் பயன்படுவது

manpower - மனித ஆற்றல்: ஒரு நாட்டில் ஆண், பெண் ஆகிய இருவரும் சேர்ந்து செய்யும் மொத்த வேலையாற்றல்

manufacture account — உற்பத்திக் கணக்கு

margin - இறுதியீடு 1) விற்கும் விலையைக் காண அடக்கச் செலவோடு சரக்குகளின் அடக்கச் செலவின் விழுக்காட்டைக் கூட்டுதல்

2) விலை வேறுபாட்டு அடிப்படையில் வணிகர் வாங்கல் விற்றல்

3) சரக்கு அல்லது செலாவணிப் பேரத்தில் முதலீடு செய்பவர் எதிர்காலத்தில் அவற்றை வாங்கக் கொடுக்கும் முன்பணம்

4) பங்குத் தரகருக்கு வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஈடுகள்

marginal cost - இறுதியீட்டு ஆக்கச் செலவு: ஒரு கூடுதல் உற்பத்தியலகை உண்டாக்க ஆகும் கூடுதல் அடக்கச்செலவு. நிறைவான போட்டி நிலைமைகளில் இச்செலவு சந்தை விலைக்குச் சமமாக இருக்கும். நிறுமங்கள் இதை ஒன்றும் செய்வதற்கில்லை

marginal revenue – இறுதியீட்டு வருவாய்: ஒரு கூடுதல் அலகு உற்பத்தியில் விற்று, ஓர் உற்பத்தியாளர் பெறும் கூடுதல் வருமானம்

market - அங்காடி: சந்தை

1)மதிப்புள்ள இனங்களை (பொருள்களை) பரிமாற்றிக் கொள்ள வாங்குபவரும் விற்பவரும் கூடுமிடம்

2) ஈடுகள், பண்டங்கள், செலாவணிகள் ஆகியவற்றில் ஈடுபடும் வாணிபக் கூட்டம்

3) ஒரு குறிப்பிட்ட விளைபொருள் அல்லது பணிக்குள்ள தேவை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் விற்பனையால் அளக்கப்படுவது

marketable security – வாணிபம் செய்யக்கூடிய ஈடு: இருப்பு,பங்கு,பத்திரம்

market assessment – அங்காடி மதிப்பீடு: ஒரு குறிப்பிட்ட சரக்கு அல்லது பணிக்காகச் சந்தையை அடையாளங் காணலும் மதிப்பிடலும்

market capitilization — அங்காடி முதலாக்கம்: சந்தை மதிப்பாக்கம். ஒரு நிறுமத்தின் வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை, அவற்றின் சந்தை விலையால் பெருக்கி வரும் தொகை அல்லது மதிப்பு