பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634

" . . . . உயர் சண்பகம் கூடு கோழிக் கொழுமுள் அரும்பின '1 -என்னும் திருத்தக்க தேவர் உவமை, இவ்வரும்பு போர்ச்சேவலின் காவின் பின்னே உள்ள கொழுத்த முள்ளைப் போன்றதெனத் தெளிவாக இதன் உருவத்தைக் காட்டுகின்றது. நிறத்தாலும் இப்பூ அம்முள் போன்றது. இத்துடன் நல்லந்துவனார் சிவபெருமான் நிறத்தைக் குறித்து, ५ “அரும்பெறல் ஆதிரையான் (சிவன்) அணிபெற (நிற அழகைப் பெற) மலர்ந்த பெருந்தண் சண்பகம்" 2 -என்றார். சேவலின் கால் முள் மஞ்சள் பாவிய செம்மை சிவன் நிறம் கருஞ்செம்மை அன்று; செம்மை. சண்பகத்தின் நிறம் இவ்விரண்டிற்கும் பெரு மளவில் பொருந்தும். மஞ்சள் பாவிய செம்மை என்பதும் பொருந்து கின்றது. இதில் "வெண்மைச் சண்பகம் உண்டு என்பர். இப் பூ தனிப் பூவளவில் சற்று பெரியது. ஆண்டாள் பாடியது போன்று குயில் கோதும் அளவுடையது. சிவனது நிறத்தைக் குறித்த கலிப்பாடல்.

இப் பூ தன் மலர்ச்சிக்குரிய இளவேனிலில் பொய்க் காமல் மலர்ந்தது போன்று தலைவதும் சொன்ன சொல் பொய்க்காது வருவான்" என்னும் கருத்தையும் வழங்குகின்றது. இளவேனிற் பருவத்தில் மலரும் இம்மலரும் வேங்கை முதலி யவற்றோடு பேசப்படினும் நச்சர் முதலிய உரையாசிரியர்கள் இதனைப் பாலை நிலத்துக் கருப்பொருளாகக் குறித்துள்ளனர்.

மேலே கண்ட கலித்தொகையின் 150 ஆவது பாடலில் வரும் கருப் பொருள் இச்சண்பகம் ஒன்றுதான். இதன் உரையிறுதியில் நச்சர், 'இது பாலைக்குரிய முதலுங் கருவும் வந்து ... ' என் றார். இருப்பினும் குறிஞ்சி நிலத்துப் பகுதியிலும் இது குறிக்கப் படுவதால் குறிஞ்சி திரிந்த பாலையே இதற்குரிய நிலமாகும் இப் பூ மணம் மிக்கது என்று கண்டோம். முச்சிக் கொண்டையில் செருகிக்கொள்வர். சண்பக மாலையையும் ធ្ឫតាហ៏សរើ 1 சது, சி : 1850, து கவி : 1.50 : 22, 23 உரை 2. கலி 150 20, 21. 5 திருமுருகு ; 26, 27. 3 நாச்சி : குயில் : 2