பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640


'நறா இதழ் கண்டன்ன செவ்விரல்' என்றது. கொத்தான இம்மலரை மகளிர் கைக்கு உவமையாக்கினர். ஒரு தலைவி தன்னோடு தலைவன் குலவிய போது தனது மெல்லிய சிவந்த விரல்கள் அமைந்த கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண் டதை தினைப்பவள். 'நறாஅ அவிழ்த்தன்ன என் மெல்விரல் போதுகொண்டு செரா அச் செங்கண் புதையவைத்து 2 என்று எண்ணிப் பூரித்தாள். இவை கொண்டு இப்பூவின் மென்பையும், வெண்மையொடு வரியோடிய செம்மையும் விளங்கும். முன்னே பேரிசாத்தனார் இப் பூவைச் சேண் நாறு நறவு' என்றார். அதற்கேற்ப நெடுந்தொலைவு மணம் வீசக் கூடியது. இம்மணத்தாலும் இதழின் எழிலாலும் மகளிரும் ஆடவரும் தயந்து கண்ணியாகவும் கோதையாகவும் தாராகவும் குடி அணிந்தனர். (கவி : 91) தறைக்கொடியின் நாரில் மலர்களைத் தொடுப்பர். 'நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி' என்றது புறம். இவ்வாறு குறிஞ்சி நிலத்து வேங்கைப்பூ தொடுக்கப்பட்டமை கூறப்படுவதாலும் குறிஞ்சித் தினைப் பாடல்களில் மிகுதியாக வருவதாலும் இப் பூ குறிஞ்சி நிலப் பூ. உவமை சொல்லப்படும் "கண் ஈர் இமை” எனத்துளி தோய்ந்த ஈரம் குறிக்கப்படுவதால் இம்மலரிதழும் கார்காலத் துளியை ஏற்றமை கொள்ளப்படும். எனவே, இது கார்காலப் பூ ஆகும். எழிலும் மணமும் கொண்ட இப்பூபற்றிப் பிற்கால இலக்கியங்கள் பேசவில்லை. 1 கலி 84 22. 3 புறம் 168 15, 2 க்வி : 54 9, 10, -