பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

641

- 義 g 50. இடியப்ப மலர், குருக்கத்தி, "சேற்றில் வளர் செந்தாமரை - என்பது சங்க காலப் பழையமொழி. 'குப்பையிலே மலர் கொஞ்கம் குருக்கத்திக் கொடி'1 -என்பது பாரதியின் புதிய மொழி. இக்கொடி பசுமையான இலைகளைக்கொண்டதால் "பைங் குருக்கத்தி' எனக் கபிலராலும், மாறன் வழுதியாலும் பாடப்பட்டது. இதன் பூ தலைப்பகுதியில் பஞ்சுபோன்ற இதழ்களை யுடையது. மெல்லிய தன்மையது. இதனை மாறன்வழுதி, ' . ... ... .... .... மதன் இல் துய்த்தலை இதழ பைங்குருக் கத்தி'3 - என்றார். இதற்குக் குருகு' என்பது மறுபெயர். குருகு' என்னும் சொல்லுக்கு வெண்மை என்று ஒரு பொருள் உண்டு. இதன் பூ வெண்மை நிறங்கொண்டதாகையால் இப்பெயர் பெற்றது. சங்க இலக்கியத்தில் இப்பெயரை அமைத்துக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஒரு சுவையான விளக்கந் தந்துள்ளார். சுவையென்றால் அருமையான சிற்றுண்டிச் சுவை. - சிற்றுணவில் அப்பம் ஒன்று. அரிசியை மாவாக இடித்து நூல் இழைபோலாக்கி அவிப்பது இடியப்பம்’ எனப்படும். இதனை வெல்லப் பாகில் இட்டும் உண்பர்; பாலில் இட்டும் உண்பர். இதனைக் கூவி விற்போர் கூவியர் எனப்படுவர். குருக்கத்தி என்னும் குருகின் பூ இவ் விடியப்பமாகியது. எவ்வாறு? உருத்திரங்கண்ணனார் காட்டுகின்றார்: காஞ்சி மரத்தைச் சுற்றிப்படர்ந்து குருக்கத்திக்கொடி பூத்துள்ளது. அப்பூ புன்புறத்தையுடையது, அகவிதழில் வரிக்கோடுகள் உள. இக்கோடுகள் அப்பூவின் தோற்றத்தை நூல் இழைபோல் காட்டுகின்றன. கரிய அடிமரத்தில் வெண் நூலாகப் பூத்திருப்பது கருமையான வெல்லப்பாகொடு இடியப்பம் கிடப்பது போன்று காட்சியளிக்கின்றது. 1 ut ur : பகைவனுக்கருள்வாய், 2 குறி. பா 93 - 3 நற் : 97 5, 6, 米41