பதிப்புரை அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கப் பெருமான் மன்பதையெல்லாம் உயிர்நீங்கி உடலம் ஒயும் உலகியல் பொதுநெறியில் செல்லாவண்ணம் காக்க மரணமிலாப் பெருவாழ்வாகிய சிறப்புநெறி நிற்றற்பொருட்டு ஆக்கித்தந்த அருட்பாவென்னும் மூலபண்டாரச் செம்பொருள் உலகவர்க்குத் தக்காங்கு எடுத்து வழங்கப்பெரு.து ஆண்டு ஒரு துாறு கடந்தது. இன்று டாக்டர் கு. சீநிவாசன் அவர்கள், ! அருள்நெறித் தலைப்பட்டு அருட்பாவெனும் அருள முதத்தை மாந்திமாந்தித் திளைத்த அருளாளர் பலரோடு பலகால் பயின்றுத் தாமும் அவ்வருள் அமுதமாம் அருட்பாவமுதருந்தி அதனை அறிவியற் கண்ணுேட்டத்தில் அனைவரும் மாந்தும்வண்ணம் அள்ளி அள்ளி வழங்குகின் ருர்கள். வள்ளற்பெருமான் யாவர் என்பதை யாவரும் அறிவர். ஆல்ை, அவர்தம் தத்துவமும், தத்துவத் தின் வளர்ச்சியும், படிமுறைகளும், முடிநிலையும் அறிந்துகொண்டவர் சிலர் உண்டேயன்றி அவற் றைப் புறங்கவியப் புலப்படுத்தியோர் இல்லை என்று தெளிவாகக் கூறலாம். இன்று வள்ளற் பெருமானின் நோக்கமும் குறிக்கோளும் அறிய சுத்தசன்மார்க்க விளக்கம் என்ற இந்த நூல் ஒர் அரிய வாய்ப்பளிக்கின்றது. தக்க ஆராய்ச்சி நூலே வெளியிடும் எங்கள் நிலையம், * சுத்தசன்மார்க்க விளக்கம் ' என்ற இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள் கின்றது. இலக்கிய நிலையத்தார்.
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/4
Appearance