பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 காக இடையிடையே தமிழ்ச்சங்க மண்டபத்திற்கும் வருவார். இவரைப்போன்றே வணிகர்பெருமக்கள் பலர் வண்டமிழ்ப் புலவர்களாக ஆங்கு விளங்கக் கண்டார். பொன்வாணிகளுர், அறுவைவாணிகன் இளவேட்டனர், பண்டவாணிகன் இளந்தேவனும் போன்ற வணிகர்கள் இவர் காலத்தில் புலவர்களாய்த் திகழ்ந்தனர். இவர்கள் புலமை ஒன்றற்காகவே தமிழை முயன்று பயின்றனர். இத்தகைய புலவர் பலர், பாண்டியன் அமைத்த பைந்தமிழ்ச்சங்கத்தில் உறுப் பினராக இருந்து விருப்புடன் தமிழை ஆராய்ந்தனர். சாத்தனரின் பெருந்தமிழ்ப் புலமையை அறிந்த நக்கிரர் முதலான நற்றமிழ்ப் புலவர்கள் அவருக்குத் தக்க இடமளித்துத் தலைக்கொண்டு போற்றினர். நன்மாறன் நட்பு சாத்தனர் மதுரையில் குடிபுகுந்த நாளில் முடி புனேந்து ஆண்ட பாண்டியன் நன்மாறன் என்பவன். சித்திரமாடம் என்ற செல்வ மாளிகையில் வாழ்ந்து இறந்தமையால் சித்திரமாடத்துத் துஞ்சிய நன் மாறன்’ எனப் பெயர்பெற்ருன். அவன் தமிழ்ப் புலவர் களைப் போற்றிக் காக்கும் புரவலனுக விளங்கின்ை. புலவர்களைக் காணுத நாளே வீணுளாக எண்ணும் இயல் பினன். அவன் சாத்தனுரைப்பற்றிக் கேள்வியுற்முன். அவரைக் கண்டு உரையாட விரும்பினுன். அதனே அறிந்த சாத்தனர், மன்னன் உறையும் சித்திரமா டத்தை கண்ணினர். புலவர் வரவை உணர்ந்த பாண்டி யன் கன்மாறன் அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கை வழங்கி அன்புடன் உரையாடினன். அவனது தோற்றத்தையும் ஏற்றத்தையும் தமிழ் ஆர்வத்தையும்