சு. இளங்கோவின் சமயம் சமயப் பொதுநோக்கு தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்ன ரேயே மக்கள் பல்வேறு சமயங்களைச் சார்ந்து வாழ்ந் தனர். சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முத லாய பல சமயத்தவரும் பூசலின்றி நேசமுடன் வாழ்ந் தனர். தமிழகத்தை ஆண்டுவந்த முடிமன்னர்களும் மக்கள் விரும்பும் சமய வாழ்வுக்குத் தடை செய்யாது தக்க வகையில் துணைபுரிந்தே வந்தனர். அதனல், மக்கள் தத்தம் சமயக் கொள்கைகளை உரிமையுடன் பெருமையாகப் பேசிவந்தனர். நாட்டில் சமயப்பூசல் சிறிதும் தலேகாட்டியதில்லை. இங்ங்னம் சமயத்தால் வேறுபட்ட மக்கள் மொழியால் ஒன்றுபட்டு, எல்லோ ரும் தமிழர் என்ற இனிய உணர்ச்சியுடன் வாழ்ந் தனர். இளங்கோவடிகள் தாம் அருளிய பெருங்காவிய மாகிய சிலப்பதிகாரத்தில் பல சமயங்களின் உண்மை களே அழகுற உரைக்கிருர். அவ்வச் சமயக் கடவுளரின் சிறப்பையெல்லாம் அவ்வச்சமயத்தவரே கண்டு வியப் புறுமாறு குறிப்பிடுகின்ருர். அவர் எச் சமயத்தைப் பற்றி இயம்பத் தொடங்கினலும் அச் சமயத்தில் ஆழ்ந்த பற்றுப்பூண்ட அன்பராகவே நின்று பேசுகின் ஆர். ஆதலால் அவர் மேற்கொண்ட சமயம் இதுதான் என்று ஒன்றை அறுதியிட முடியாத நிலையில் இருக் கிறது. சமயக் கருத்துக்களே நூலில் புகுத்த விரும்பும் புலவர்கட்கு இளங்கோவடிகள் ஏற்ற வழிகாட்டியாய் விளங்குகின்ருர். அவரது வழியைப் பின்பற்ருத புலவர் கள் தமது முயற்சியில் தோல்வியே கண்டனர்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/49
Appearance