பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இத் திருப்பாட்டில், ' என்னே என்னிடத்தே இருந்தவா றளித்தனே ’’ என்று உயிரனுபவத்தின் மூலக்கருத்தையும் விளக்கிய திறன் அருமையாக உள்ளது. ‘ என்னே எனக்களித்தருள் என்று சுவாமிகள் திருவருள் முறையீட்டுள்ளும் வேண்டு கின் ருர்கள். மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர் திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி யீந்தநின் சீர்நினைந்தே விருப்பா நினையடுத் தேனெனக் கீந்திட வேயின்றென்னை கருப்பா தின் சித்தந் திருப்பாயென் மீது -- கறைக்கண்டனே -திரு. 1 : 6 : 55 அருளனுபவம் உயிரனுபவமாகிய ப த் தி ய ங் .ெ க | ண் டு உண்ணவேண்டிய மருந்து அருளனுபவம். மருந் தறியேன், மணியறியேன் மந்திரமொன்றறியேன் என்று அழுது முறையிட்ட அடிகளுக்கு ஆண்ட வன் மருந்தும், மணியும், மந்திரமும் அருளிய தோடு துறையிது, வழியிது, துணிவிது, நீசெயும் முறையிது என்றருளினுன் என்பர். மருந்திது மணியிது மந்திர மிதுசெய் வகையிது துறையிது வழியிது வெனவே இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமுது அளித்தே என்னையுந் தன்னையும் ஏகம தாக்கி -திரு. 6:33: