14 வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்
- சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
-திரு. 6. 12: 7 என்று கூறியருளி இறைவன் திருவருளே முழுக்க முழுக்கப் பெற்றுத் தாமும் வான் கலந்து நிற்கின் ருர். வான் என்பது ஆகாயம். மணிவாசகப் பெரு மான் எங்ங்னம் வான் கலந்தார் என்பதையும் அடிகள் கூறுகின் ருர். மன்புருவ நடுமுதலா மனம் புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வா ரெல்லாரும் ஏமாப்ப அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவ மடைந்து பின்னர் இன்புருவ மாயினை நீ எழில்வாத ஆரிறையே -திரு. 4:12:3 இத்திருப்பாடலில் வாதவூர்ப்பெருமான் இறைவனுகிய செய்தி கூறப்படுகின்ற தெனினு மாம். மணிவாசகர் அன்புருவம், அருளுருவம், இன் புருவம் ஆகிய முத்திறல் வடிவமும் ஒன்றன் பின் ஒன்ருகப் பெற்றனர். இவை முறையே சுத்த தேகம், பிரணவ தேகம், ஞானதேகம் எனப்படும். இவை மூன்றும் சுத்ததேகங்களே. மற்று இவை சுவர்ணதேகம் நித்தியதேகமெனவும்படும். சுத்ததேகம் பெற்றவரெல்லாம் இறவாமை யுற்ருர் என்று கூறுவதற்கில்லை. சுவர்ணதேகம் பெற்ற பிரமன் முதலிய பஞ்சகருத்தர்களில் காலத் தால் தடைபடுபவர்களுமுண்டு என்று அடிகள்