பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

697


"பஞ்சி அடரனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமாலென்று அஞ்சும் மலரடிகள்' - என வள்ளுவர் சொல்லான நெருஞ்சிப் பழம் என்பதையும் அமைத்துப் பாடினார். இவ்வாறு தமிழ்ச் சான்றோரும் பிறரும் அனிச்சத்தின் மென்மையைக் கோடிட்டுச் சொல்லுவதைக் கொண்டுதான் பரி மேலழகர், 'உலகத்தாரால் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப் பூவும்”2 -என உரை விரித்தார். இதுபோன்றே அனிச்சம் குழையும் தன்மையையும், 'அணிநிற அனிச்சம் பிணியவிழ்ந் தலர்ந்த அந்தண் நறுமலர் அயிர்ப்பிற்று (குழையும் தன்மைத்து. ஆகும்” (பெருங்: நரவாண:5:134, 155) 'அனிச்சத்தம் போதுபோலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி' (சீன, சி: 2939) 'அனிச்சம் கார்முகம் வீசிட மாசறு துவள் (குழையும்) பஞ்சான" (திருப்புகழ் : திருச் சொல்:19) அனிச்சமலர் தலையில் பெய்து சூடப்பட்டதைக் குறித்த வள்ளுவவழி நின்று, - "அனிச்சப் பூங்கோதை தட்டி' எனத் திருத்தக்க தேவரும், - 'இருநூற் பெய்த அனிச்ச கோதையும் ' எனக் கொங்கு வேளிரும் காட்டினர். திருத்தக்க தேவர் அனிச்சம் மலர்ந்து தொடுத்தால் அதிகம் குழையும் என்று கருதி மலராத போதைத் தொடுத்ததாகப் பாடினார் போலும், தொடுத்த அளவில் குழைந்து மாழ்குவதைக் கருதிப்போலும் கொங்கு வேளிர், தொடுப்போர் கை அதிகம் பட்டுக் குழையாதிருக்க இரண்டு நூல்கொண்டு பின்னியதாகப் பாடினார். ; , , 1. சிவ. சி : 24.54. 3. சிவ, சி 745 2 குறள் ; 1120 உரை, 4 பெருங் : உஞ்சை : 42 - 11