இதழ்கள்
61
இதழ்கள் 61 வில்லை. ஜன்னலுக்கு வெளியே மொட்டை மாடியில் வைத்த பூந் தொட்டிகளுக்கு அருகில் ஓர் உருவம் தெரிந்தது. அவன் எழுந்து சென்று அவள் அருகே நின்றான்.
வானத்தை மப்பு பாறை பாறையாய் அடைத்தது. உடம்பில் படாத ஒரு காற்று லேசாய்ச் சுழன்று அடக்க மிலாது ஆடிற்று. வாசனை தூவினாற்போல் பொடி இருள் சூழ்ந்தது. அவள் அவனைப் பார்த்தாளோ இல்லையோ, பார்த்துந்தான் பார்க்கவில்லையோ? அவள் முதுகை விரல் நுனியால் தொட்டான். அவள் நிலை கலையவில்லை. தோளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான். அந்நேரமே மலர்ந்த பன்னிரின் மணம் குயீரெனக் கிளம்பியது. தலை கிர்ர்ரிட்டது. அவனுக்குச் சிறகுகளின்மேல் பறப்பதுபோல் இருந்தது. இந் நள்ளிரவின் இருளில் எல்லாவற்றின் மூலமும் தன் அகண்ட மோனத்தில் உகுத்த கண்ணிர்போல் துளித்துத் தனித்து உலகு அந்தரத்தில் தொங்கிற்று. அந்த ஆதாரத் தனிமை அந்த முறையில் நெஞ்சைத் தொட்ட இடத்திற்குத் துக்கம் அடிவயிற்றில் அலை பொங்கிற்று. அவள் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவள் கைகள் அவன் கழுத்தைச் சுற்றி இறுகின. உடலில் படாது லேசாய்ச் சுழன்று ஆடிய காற்று நெஞ்சுள் புகுந்து புயலாய்ப் பிய்த்துக்கொண்டது. வானத்தை அடைந்த மேகப் பாறைகள் உடைந்தன. நட்சத்திரங்கள் பெருக்கெடுத்துப் புழுங்கின. உலகம் அவர்களைப் பெரிய பூக்கிண்ணம் போல் ஏந்திற்று. அதன் நடுவில் புயல் அலைக்கும் கோசக் காடுகளின் அடர்ந்த இருளில் இருவரும் வழி தப்பி ஒருவருக்கொருவர் தேடித் துணையாகித் தவித்தனர். இருளில் மின்னல் கொடிகள் பிறந்து இறங்கி அவன் உடலை ஊடுருவின. தகதகப்பில் நெற்றியும், கண்ணின் மேலிமையின் அடிப் புறமும், எச்சிலின் கொழ கொழப்பும், தோள்களும், இடை யும், துடைகளும் தகிதகித்தன. உயிர் மீன்குட்டி போல் துள்ளித் துள்ளி எழுந்து மீண்டும் மீண்டும் உடல் தட்டில் துடித்துத் துடித்து வீழ்கையில் உடல்கள் அதிர்ந்தன.