பக்கம்:இதழ்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இதழ்கள்

#2 இதழ்கள் நினைவு கழன்று வெள்ளத்தோடு சென்றது. எப்பொழுது நினைவு மீண்டதோ தெரியவில்லை. ஆனால் கண்ணிமை களின் அடியில் நினைவு மலரும் குளிர்ச்சிதான் தெரிந்தது. இமைகள் இதழ்களாய் அவிழ்ந்து திறந்தன. தான் மலர்ந் தாற்போல் தனி மணம். நெஞ்சை ஒழித்துப் பெருக்கி வைத்தாற்போல் ஒர் அமைதி. வானில் நட்சத்திரங்கள் குடலையிலிருந்து பூக்கள் சரிந்தாற்போல் கண் வீச்சுக்கு எட்டியவரை அடர்ந்து வாரியிறைத்திருந்தன. அவற்றின் தண்ணொளி அவன்மேல் அருள்போல் இறங்கிற்று. யாருடைய வருகைக்காக இந்த மோனக்காவல்; இந்த அபரிமித மலர்ச் செறிவு? இதில் தெரியும் தனித் தூய்மை? எவன் வந்து நெஞ்சின் வாசற்படியில் நின்றால் அப்படி அவன் நின்றதும் அவன் பாதங்களில் இடுவதற்காகப் பத்திர மாய்த் தன்னோடு தன்னற்றதாய் வைத்துக் கொண்டிருக்கும் தன்னர்ப்பனம்? நான் எனக்கு இல்லை. பின் யாருக்கு? யாருக்கு? கேள்விகளே மலர்கள். அவற்றின் அர்த்தங்களே அந்த மலர்களின் மணங்கள். அந்த அர்த்தங்களுள் புதைந்த பதில்களுக்கு அந்தக் கேள்வி மலர்களே அர்ச்சனைகள். திடீரென்று அவள் தோள்கள் குலுங்கின. மார்பே வெடித்துவிடும் போல் விக்கி விக்கி அழுதாள். நினைவின் மிதப்பிலிருந்து முரட்டுத்தனமாய், மனமிலாது மீட்கப் பட்டதும், அவளையோ அவன் நிலைக்களத்தையோ சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏதோ கொடியி லிருந்து அறுந்துவிட்டாற்போல் இப்போது படும் விரக்தி யுணர்ச்சியில் அவள் வேற்றாளாய்த்தான் பட்டாள். ஏன் அழுகிறாய். என்று கேட்கவோ, தேற்றவோ அல்லது அவள் கண்களைத் துடைக்கவோ தோன்றவில்லை. அழுபவர் அழட்டும், சிரிப்பவர் சிரிக்கட்டும். சிரிப்பவர் அழட்டும், அழுபவர் சிரிக்கட்டும். சிந்திப்பவர் சிந்திக்கட்டும். உழல்பவர் உழலட்டும், விலகி நிற்பவர் நிற்கட்டும். எதற்குத் தான் உண்மையில் அர்த்தம் இருக்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/62&oldid=1247160" இலிருந்து மீள்விக்கப்பட்டது