பக்கம்:வீர காவியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

படையெழுச்சிப் படலம்

இயல் 75

விரைந்திவண் வந்த வீரன் அனைத்தும்

வேழன் றன்பால் விளம்பினன் எடுத்தே.


சொல்லேந்தித் துரதுசெலும் வீரன், காற்றுத்
   தோல்விபெற விரைகின்ற புரவி ஏறி,
மல்லேந்தும் திண்டோளான் வேழன் வைகும்
   மாநகராம் தண்டலத்தை எய்தி யங்குக்
கல்லேந்தும் உடலானைக் கண்டு தங்கள்
   காவலன் சொல் செய்திஎலாம் எடுத்துச் சொல்வான்
'வல்லேந்திப் பொருமறவ! நமது நாட்டை
   வயப்படுத்தப் போர் தொடுக்க ஒருவன் வந்தான்.384


முறுவலளும் கோளரிஎன் ருெருபேர் தாங்கும்
   மொய்ம்புடையன் வெண்ணகரைப் பற்றிக்கொண்டான்;
உறுவலிய கோடனையும் சிறையில் வைத்தான்;
   உருவத்தால் உனை நிகர்த்தே விளங்கு கின்ருன்:
தெறுசமரில் எனைப்பொருவார் மூவ கத்தில்
   தேர்மறவர் எவரேனும் உளரோ என்று
தறுகணய்ை அறைகூவல் விடுத்து நின்று
   தருக்குற்று வருகின்ருன் நாடு நோக்கி 335

--------------------

வல்-ஒரே காலத்தில் பலரை வீழ்த்தும் வலிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/170&oldid=911306" இலிருந்து மீள்விக்கப்பட்டது