திருவள்ளுவர்

விக்கிமூலம் இலிருந்து

கவிமணியின் கவிமலர்கள்

சிவாயநம ==தெய்வப் புலவன்= ஆசிரியர்: =அ.அருள்செல்வன் 👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. 👉🏿 திருக்குறளில் சைவ சித்தாந்தம் மட்டும்மல்ல சைவதமிழாின் வாழ்வியல் நெறியும் கூட.👈🏿 "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

எல்லா எழுத்துக்களும் அ ஒலியை முதலாக உடையன. அதுபோல உலகு ஆதிபகவன் ஆகிய இறைவனை முதலாக உடையது.இறைவன் ஆதியும் பகவுமாக இருப்பவன் தோன்று-நிலையிலும் தோன்றா-நிலையிலும் ஆதியாக இருப்பவன்.

👉🏿'குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர்

ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.

👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.

👉🏿-பண்ணிரு திருமுறைகள் இறைவனை


ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் டர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.

👉🏿பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

👉🏿“ஆதிபரன் ஆட அங்கை கனலாட ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட பாதிமதி யாட பாரண்ட மீதாட நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”

👉🏿“ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”

👉🏿“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார் பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”

👉🏿மூன்றாம் திருமுறை 👉🏿“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி னாள்பனி மாமதி போன்முகத் தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந் நிறைந் துவலஞ் செய்து மாமலர் புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”

👉🏿தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்: “ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன் வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல் கோமான் பெருங்கருணை கொண்டு. சிவாயநம ==தெய்வப் புலவன்= ஆசிரியர்: =அ.அருள்செல்வன்

ஆசிரியர்:[தொகு]

1. திருவள்ளுவர்


1. இம்மை மறுமையின் - பயன்கள்
எவருமே யடையச்
செம்மை நெறியினை - விளக்கும்
தெய்வ நூல் செய்தோன்.
2. வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல
வாழ்வை ஆக்க வந்தோன்;
ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு
உயிரை ஊட்ட வந்தோன்.
3. தொன்மை நூல்க ளெல்லாம் - நன்கு
துருவி ஆராய்ந்து,
நன்மை தீமைகள் வகுத்த
நாவலர் கோமான்!
4. எதை மறந்தாலும் - உள்ளம்
என்றுமே மறவா,
பொது மறை தந்த - தேவன்
பொய் சொல்லாப் புலவன்!
5. அறிவின் எல்லை கண்டோன் - உலகை
அளந்து கணக்கிட்டோன்;
தறியில் ஆடை நெய்தோன் - தமிழில்
தரும நூல் நூற்றோன்!
6. சாதி ஒன்றேயாம் - தமிழர்
சமயம் ஒன்றேயாம்!
நீதி ஒன்றேயாம்! - என்று
நிலை நிறுத்தி நின்றோன்!

(வேறு)

(வெண்பா)


7. வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெல்லாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்டு தெளிந்து.
8. சாதி மதபேதம் சற்றேனு மின்றிநடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - தோலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.
9. புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன்? - வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.
10. நாலா ரணப்பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகு மென்றுபா ராட்டுமே - நூலாய்ந்து
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந் தோது முலகு.


2. திருக்குறள்

(வெண்பா)

1. மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெலாம்

சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம் - மிக்கபுகழ்ச்
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே!
சிந்தனை செய்வாய் தினம்.

(வேறு)

2. சங்கப் பலகையிலே - அன்று

தனிய மர்ந்த நூலாம்!
பங்கய நான்முகனே - தமிழில்
பகர்ந்த மாமறையாம்!

3. ஆதி மனுநூலைத் - திருத்தி

அமைத்த நன் நூலாம்!
நீதி எடுத்தோதப் - புவியில்
நிகரிலா நூலாம்!

4. ஓதி அறம் தெரிவீர் - பொருளின்

உண்மை உணர்ந்திடுவீர்!
காதலின் காட்சியெல்லாம் - நன்கு
கண்டு களித்திடுவீர்!

பார்க்க:[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவள்ளுவர்&oldid=508612" இலிருந்து மீள்விக்கப்பட்டது