- அகநானூறு
- நித்திலக் கோவை
- பாடல் 351
- வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
- பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
- பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
- குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
- அறிவுறூஉம் கொல்லோ தானே- கதிர்தெற 5
- கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
- அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
- புழல்வீ இருப்பைப் புன்காட்டு அத்தம்
- மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
- செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி 10
- எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
- விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
- திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
- இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
- வருந்துதோள் பூசல் களையும் மருந்தென 15
- உள்ளுதொறு படூஉம் பல்லி
- புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே? 17
|
|