உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உலகத் தமிழ்


திருக்கிறார்கள். இதுவும் அந் நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெருந்துணை செய்கிறது.

இதையெல்லாம் பேசிக்கொண்டே நடந்தோம். இயற்கை வெளிச்சம் மறையவில்லை. மணியென்னவென்று கைக் கடிகாரத்தைப் பார்த்தோம். ஒன்பது காட்டிற்று. ‘இரவு ஒன்பது மணிக்கும் பகல் வெளிச்சமா!’ என்று வியந்து கொண்டே கார் ஏறித் திரும்பினோம்.

நான் ஜினிவாவிற்குப் போய்ச் சேர்ந்தது வெள்ளிக் கிழமை மாலை.

சனி, ஞாயிற்றுக் கிழமை-இரு நாள்களும் விடுமுறை மேனாட்டார் விடுமுறை நாள்களை வீட்டில் கழிப்பது அரிது. அந்நாள்களில் அலுவலகங்களில் காக்கை குருவியைக்கூடக் காண முடியாது. வார விடுமுறையின்போது, வெளியூருக்கு மகிழ்ச்சி யுலா, பிக்னிக் செல்லாவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் வராது. இப் பழக்கம் மேனாடுகளில் வாழும் நம்மவர்களையும் விடவில்லை.

எனவே, அடுத்த நாள் வெளியூருக்குக் காரில் சென்றுவரத் திட்டமிட்டார் சிதம்பராாதன். சனிக் கிழமை மாலை தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு மதியழகன் ஜினிவா வருவதாக ஏற்பாடு. எனவே அவரை விமான நிலையத்தில் வரவேற்கவும் விரும்பினார். அதற்குத் தோதாக, ஜீனிவாவிற்கு நாற்பத்தைந்து கிலோ தூரத்திலுள்ள ‘அன்னசி’ என்ற இடத்திற்குப் போக முடிவு செய்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/39&oldid=480798" இலிருந்து மீள்விக்கப்பட்டது