உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கொடுப்பதில்லை' என்று பெருமைப்பட்டார் பள்ளியின் கலைவர்.
'எல்லாப் பாடங்களையும் படித்துவிட்டுக் கூடுதலாக இசைப் பயிற்சி பெறுவதால் இசையில் தேர்ச்சி ஒருமாதிரிதானே இருக்கும்?’-இது என்னுடைய ஐயம்.
'இல்லை. இப் பள்ளியில் இசை பயின்றவர்கள், நாட்டில் நல்ல இசை அரசுகளாகப் புகழோடு உள்ளனர்' என்றார் பள்ளித் தலைவர்.
இசைப் பள்ளியில், இசைக்கு இடம் வேண்டுமென்று பிறமொழிகளையோ பாடங்களையோ நீக்கவில்லை; குறைக்கவில்லை. இதை நாம் சிறப்பாக நினைவில் கொள்ளவேண்டும்.
பாடங்களையோ மொழிகளேயோ ஒ ர ள வு குறைத்துக்கொண்டால் என்ன? இப்படி ஒர் ஐயம் எழுகிறதல்லவா? இக் காலக் குடிமக்கள் அத்தனை பேருக்கும் அவர்கள் என்ன தொழிலில் ஈடுபட்டி ருந்தாலும்-குறைந்த ஓரளவு பொதுக் கல்வி இன்றி யமையாதது என்பது சோவியத்துக் கல்வியாளர் களின் ஆழ்ந்த முடிவு. அதைக் குறைப்பது இளைஞர்களின் எதிர்காலத்திற்குக் கழுத்தறுப்பு என்பது அவர்களின் தெளிவு. ஆகவே, ஏதாவது ஒரு தறையில் தனித் திறமையிருந்தால், அதை வளர்ப்பதற்காகப் பொதுக் கல்வியின் தரத்தைக் குறைக்கக்கூடாது. மாருகக் கூடுதல் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது திட்டம்.

'பொதுப் பாடங்களையும் முழுக்க முழுக்கப் படித்துவிட்டு, மேற்கொண்டு இசைப் பயிற்சியும்