இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கனிகள்
141
787. ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய்.
ஆவ்பரி
788.மனம் கொண்டது மாளிகை; நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.
மில்டன்
789.விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன்.
ஷோபனார்
790.உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.
ஜாண்ஸன்
791. வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பாரமாகவே யிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும்.
கதே
792.பெற்றது சிறிதேனும் திருப்தியுற முடியாதவன் முடிவிலாத் தண்டனை அனுபவிப்பவனாவான்.
காரிக்