பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அறிவுக்



993.எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.

கார்லைல்

994.நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.

கார்லைல்


64. சரித்திரம்

995. முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே.

ஸிஸரோ

996.எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே.

லாண்டார்

997.சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது?

நெப்போலியன்

998.சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று,

போலிங்புரோக்

999.சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று.

கிப்பன்
—:௦:—