பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்தப் பகுதி. 7重

செங்கைத் துடிதென் மதுரேசர்

செம்பொற் புயத்திற் சேர்க்குமாம்;

இங்கிப் படிபுத் திரரேகை

எவர்க்கும் இலையிப் படிதோளில்

தங்கும் மறு அங் கயற்கணம்மை

தன்னே டிருக்கத் தரும்.அம்மே. (8)

2. நால்வர் நான்மணிமாலை.

இதனை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரைப்பற் றிய குறிப்பு நீதிப்பகுதியிற் காண்க. இது, கிருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் சைவசமய குரவர் நால்வசையும், அவரது திருப்பாடல்களையும் முறையே வெண்பா, கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா என்னும் நால் வகைப் பாடல்களால், துதிக்கும் நாற்பது பாடல்களைக்கொண்ட ஒரு சிறு பிசபக்தம். அடியில்வரும் பாடல் மாணிக்கவாசகரையும், அவரது திருவாசகச் சிறப்பையும் ஒதுவது.

திருவாசகச் சிறப்பு. திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருத்தின் கிழல்வாய் உண்ட கிகரிலா கந்தத் தேன்தேக் கெறியும் செய்ய மாணிக்க வாசகன் புகன்ற மதுர வாசகம், யாவரும் ஒதும் இயற்கைத் தாதலின், பொற்கல கிகர்க்கும்; பூசுரர் நான்மறை மட்கல நிகர்க்கும்; மதுரவாசகம் ஒதின், முத்தி உறுபயன்; வேதம் ஒதின் மெய்ப்பயன் அறமே. (9)