பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49


உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு

aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500 கி.மீ.தொலைவில் உள்ளது)

aphtha : (நோயி.) கொப்புளம் :வாயின் உட்பகுதியை மூடியிருக்கும் சளிச்சவ்வு வழியாக, சில நஞ்சுடைய அல்லது எரிச்சலூட்டும் பொருளிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருளினால் வாயில் உண்டாகும் கொப்புளம்

apnoea : (உட.) மூச்சு நிற்றல் : மூச்சு விடுவதைத் தூண்டிவிடுவதற்குத் தேவையான கார்பன்டையாக்சைடு இரத்தத்தில் மிகவும் குறைந்து போவதால் மூச்சு நின்று போதல்

apogee: (வானூ. விண்.) புவிச்சேணிலை / பூமி உச்சநிலை: ஞாயிறும், திங்களும், கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந் தொலைவாயிருக்கும் நிலை

apomorphine: (மருந்.) அப்போமார்ஃபின்: வாந்தி உண்டாகும்படி செய்வதற்குப் பயன்படும் மருந்து. இருமலைக் குறைப்பதற்கும் இதனைச் சிறிதளவு கொடுப்பதுண்டு

apparent e.m.f.: (மின்,) வெளிப்படை மின்னியக்கு விசை: தடையின் வழியாக மின்னோட்டம் பாய்வதன் வாயிலாக ஏற்படும் மின் அழுத்தக் குறைவினால் சுட்டிக்காட்டப்படும் மின்னழுத்த அலகு எண்ணிக்கை அளவு

apparent power: (மின்.) வெளிப்படைத் திறன் : ஒரு தூண்டு மாறு மின்னோட்டச்சுற்று வழியில் ஆம்பியரையும் மின்னழுத்த அலகு எண்ணிக்கை அளவினையும் (ஓல்ட்) பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகை திறனளவி காட்டும் உண்மைத் திறனிலிருந்து இது வேறுபட்டது

apparent watts : (மின்.) வெளிப்படை மின்னாற்றல் விசை : ஒரு மாறு மின்னோட்டச் சுற்று வழியில் மின்னழுத்த அலகு எண்ணிக்கையினை ஆம்பியர்கள் எண்ணிக்கையினையும் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகை

appendage: துணையுறுப்பு : முதன்மையான அல்லது பெரியதான ஒரு பொருளுடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது சேர்ந்திருக்கிற, ஆனால் அதற்கு இன்றியமையாதிருக்கிற ஒரு பொருள்

appendicitis : (நோயி.) குடல் முளை அழற்சி : குடல் முளையில் ஏற்படும் வீக்கம்

appendix : (அச்சு.) பிற்சேர்க்கை ஒரு அச்சிட்ட நூலுக்குக் கூடுத லாக அல்லது துணையாகச் சேர்க்கப்பட்டுள்ள பகுதி இது. பெரும்பாலும் கடைசி அத்தியாயத்திற்குப் பின்னர் இணைக்கப்பட்டிருக்கும்

appendix: (உட.) குடல் முளை : குடலின்மேற் புறத்தி னின்றும் தோன்றும் சிறு முளை

படிமம்:அதொ1


aperture : (மின்.) இடைவெளி : துளை இடையிடம்

appliances : (மின்.) துணைக் கருவிகள் : வீடுகளில் உழைப்பினை மிச்சப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிற வாட்டு மின்கலம், கலவைச் சாதனம், துப்புறவுக் கருவி