172
combination die : (எந்.) இணைப்பு வார்ப்புப் படிவம் : ஒரு பாளத்தில் கோட்டுக் குறிவெட்டுவதற்கும், அந்தப் பாளத்தில் தேவையான வடிவங்களை வரைவதற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட வார்ப்புப் படிவம்
combination drill counter sink : இணைப்பு துரப்பணம் மற்றும் பள்ளம் : ஒரு கடைசல் எந்திரத்தின் மையங்களிடையே பிடித்துக்கொண்டு மையக் குறியிடுவதற்குப் பயன்படுகிறது. பார்க்க மையத் துரப்பணம்
combination halftone : (அச்சு.) இணைப்பு நுண்பதிவுப் படம் : இருமறி நிலைத் தகடுகள் தேவைப்படுகிற நுண்பதிவுப் படமும் வரித்தகவுகளும் கொண்ட ஒரு செதுக்குருவம்
combination plate : (அச்சு) இணைப்பு அச்சுத் தகடு : நுண்பதிவுப் படமும், கோட்டு வரியும் ஒருங்கிணைவாக ஒரே தகட்டில் செதுக்கப்பட்டுள்ள ஒரு தகடு
combination pliers : இணைப்பு சாமணம் : ஒரு நகரும் இணைப்பு மூலமாக வேண்டிய வடிவளவுக்கு வாய்திற்க்கச் செய்யும் வகையில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய ஒருவகைக் குறடு இதன் புற அலகில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உள் அலகு உருண்ட பொருள்களைப் பற்றக் கூடிய வகையில் தடங்கொண்டதாக இருக்கும்
combination square : (பட்.) இணைப்புச் சதுரச் சட்டம் : நகரக்கூடிய ஒரு சதுரக் கொண்டையுடன், சரியான காப்பு மட்டமும், மையக் கொண்டையும் உடைய ஒரு சதுரச் சட்டம்
combination switch : (மின்.) இணைப்பு விசை : அழல் மூட்டுவதையும், ஒளியையும் கட்டுப்படுத்துவதற்காக உந்து வண்டிகளில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு விசை
combustion : (வேதி.) கனற்சி : எளிதில் தீப்பற்றும் தன்மையுடைய ஒரு பொருள். ஆக்சிஜனுடன் வேதியல் முறையில் ஒருங்கிணைந்து வெப்பம் உண்டாக்கும் விளைவு
combustion chamber : (தானி.எந்.) கனற்சிக் கலம் : நீள் உருளையில் உந்து தண்டிற்கு நேர் மேலே நீள் உருளையின் கொண்டையில் உள்ள இடைவெளி
commericial efficiency of dynamo : நேர்மின்னாக்கி வாணிகத் திறம்பாடு : இது உட்பாட்டினை வெளிப்பாட்டினால் வகுப்பதன் மூலம் அறுதியிடப்படுகிறது. இது சதவீதத்தில் குறிப்பிடப்படும்
commercial efficiency of motor : (மின்.) மின்னோடியின் வாணிகத் திறம்பாடு : விசை தடுப்புக்கு திரைத் திறனை மின்விசைக் குதிரை திறனால் வகுப்பதால் கிடைக்கும் ஈவு, அல்லது வெளிப்பாட்டினை உட்பாட்டினால் வகுத்துச் சதவீதத்தில் குறிக்கும் அளவு
commercial flux : வாணிக இளக்கி : ஒரு வாணிகப் பெயரில் விற்பனை செய்யப்படும் ஓர் இளக்கும் பொருள். இது ஒட்டவைப்பு. பொடி வைத்திணைத்தல், பற்ற