உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சிலவற்றை இடமாற்றி அனுப்பவும் இது பயன்படுத்தப்படுகிறது

colour filter : வண்ணத் திரைதகடு : வேண்டிய சில ஒளிக்கதிர்களை மட்டும் ஊடுருவி விட வல்ல திரைத்தகடு

colour picture tube : (மின்.) வண்ணப்படக் குழல் : தொலைக்காட்சியில், எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது வண்ணப்படமாக விழச்செய்யும் அமைவு

colour signal : (மின்.) வண்ணச் சமிக்கை : வண்ணத் தொலைக்காட்சிப் படத்தில் வண்ண முனைப்புத் திறனைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சமிக்கை முறை

colour for tempering : பதமாக்கும் வண்ணம் : எஃகு வகையினை அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும், நீட்டிப்பு ஆற்றலும் உடைய நிலைக்குப் பதப்படுத்துங்கால், வெண்மை. இளம்பழுப்பு. அடர் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் தோன்றுகின்றன. தேவையான கடினத் தன்மையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட நிறம் தோன்றும்போது எஃகின் பதனாக்கம் கண்டறியப்படுகிறது

colour form : (அச்சு.) வண்ண உருப்படிவம் : அச்சுப் பணியில் இரண்டாம் வண்ண அச்சுப்பதிப்பு உருப்படிவம்

colour-harden : (உலோ.) வண்ணச் செறிவூட்டுதல் : பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இரும்பைக்கடும் பதப்படுத்துவதன் வாயிலாக ஒரு கவர்ச்சியான வண்ணத்தை உண்டாக்குதல்

colour proof : (அச்சு.) வண்ணப் பார்வைப் படிகள் : அச்சுருப் பதிவு செய்யப்பட்ட வண்ண அச்சுப் பதிவுத் தகடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பார்வைப் படிகள்.

colour proofs - progressive : (அச்சு.) படிப்படியான வண்ணப் பார்வைப் படிகள் : ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்தனி அச்சுப்பதிவுத் தகடுகளை எடுத்து, ஒரு வரிசை முறையில் அடுத்தடுத்து வண்ணங்களை அச்சிட்டு ஒருங்கிணைவாக எடுக்கப்பட்ட தனிப்பார்வைப் படிகள்

colour scheme : நிற அமைப்புத் திட்டம் : ஒர் அச்சுப் பணிக்காக வண்ணங்களைப் பொதுவாகக் கலந்து அமைப்பதற்கான திட்டம்

colour work : (அச்சு.) வண்ண வேலைப்பாடு : பொதுவாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் அச்சிடுவதற்கான வண்ண அச்சுப் பதிவுத் தகடுகளைக் குறிக்கும் சொற்றொடர்

colt’s armory press : (அச்சு.) கோல்ட் கட்டி அச்சு எந்திரம் : அச்சு தாள் அழுத்தும் தகட்டுப் பாள முறையில் அச்சிடக்கூடிய ஒரு வகைக் கனரக அச்சு எந்திரம்

column : (க.க.) (1) தூண் : நீள்வாக்கு அச்சின் திசையில் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய நிமிர் நிலையான தூண்

(2) பத்தி: பத்திரிகைகளில் பக்கத்தின் அகலக் கூறான பத்தி நிரல்

combination : (வேதி.) தனி இணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தனிமங்களின் இணைப்பு

combination chuck : (எந்.) இணைப்புக் கவ்வி : பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பற்று கருவி. இது தற்சார்பான தடைச்செயல் முறையினையும் கொண்டிருக்கும்