இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
Vii
யும் வியாபித்துள்ளது. இன்று பல உலக நாடுகளில் போர்க்குணம் தலைதுாக்கி நிற்கிறது. அக் குணத்தை வேரறுக்கவும், உலகில் சாந்தி நிலவவும், அன்பு பெருகவும், அமைதி நிலவிடவும் அடிகளாரின் திருவாசகத் தேன் முழுமையும் பயன்படும் என்றால் அது மிகையாகாது.
இசைப்பற்றையும், இறைப்பற்றையும், அற நெறியையும், அன்பு வாழ்க்கையையும் மேற் கொள்ளத் துண்டும் பயன்மிக்க இனியதோர் நூலை தமிழ்ச் சமுதாயத்துக்கு வழங்கிவிட்டு சிவபதமடைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரை நினைவில் கொண்டு, அவரைப் போற்றி வணங்கி, இந்நூலை தமிழ் மக்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
அன்பன்
ஏ. திருதாவுக்கரசு
வானதி பதிப்பகம்