இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்த உலகில் எதுவும் வளரும்; எவரும் வளர்வர். வளர்வன எல்லாம் மாறும்—— இதுவே உலகத்து இயற்கை. ஆன்மா வளர வேண்டும். ஆம்! ஆன்மா வளர்வதற்கும் மாற்றங்கள் பெற்று நிறைநலம் பெறுவதற்குமே எடுத்தது பிறப்பு.
நிலம் உழுதால் நிலத்தின் கெட்டித்தன்மை நெகிழ்ந்து கொடுக்கும்; விதைகளை வாங்கி செடியாக்கி, மரமாக்கி வளர்த்துக் கொடுக்கும். உழுத நிலமே பயன்படும். இரும்பை உருக்க வேண்டும். இரும்பை உருக்கிக் காய்ச்சினால்தான் வலிமை பெறும்; சுமை தாங்கும்.
மாற்றுக்குறையாத தங்கமேயானாலும் உருக்கினால் தான் அணிகள் செய்யலாம். பயன் கருதினால் வளர்ச்சி வேண்டும். வளர்ச்சிக்குரிய செயற்பாடுகளுற்றால்தான் வளர்ச்சி ஏற்படும்.
மனிதப்படைப்பின் குறிக்கோள் என்ன? அன்புற்றமர்ந்து வாழ்தலே வையகத்தியற்கை. இன்று மனித இனம் எங்குச் சென்று கொண்டிருக்கிறது? இன்றைய