திருவாசகத் தேன் ☐ 3
நோக்கியே செல்லும். தேனைச் சேகரிக்கும். எப்படி வாழ வேண்டும் என்பதற்குத் தேனீ ஒர் உதாரணம்.
மாணிக்கவாசகராகிய தேனீ இறைவன் திருவடி மலர்களில் மட்டும் உட்கார்ந்து எடுத்த தேன், திருவாசகம். 'திருவாசகம் என்ற தேன் ஒரே பூவின் தேன். வேறு எந்த மலர்களிலும் மாணிக்கவாசகராகிய தேனீ உட்கார்ந்ததில்லை. பரமசிவமே கொற்றாளாகி மண் சுமந்து பெற்ற பரிசு, பண் சுமந்த பாடலாகிய திருவாசகம்! சிவபெருமானால் படி எடுக்கப்பெற்ற நூல் இது.
எத்தனை எத்தனை பிறப்புக்கள் பிறந்தாயிற்று! எய்ப்பும் களைப்பும் வந்தாயிற்று! கடினமான பிறப்புக்கள்! சூழ்ந்து வந்த தளைகள் எண்ணற்றவை! இவையெல்லாம் கழல வேண்டுமா? திருவாசகத் தேனமுதப் பாடல்களை ஒதுக!
பிறப்பு என்ன? வாழ்க்கை என்ன? நன்மை, தீமை என்ற சுழற்சி வட்டம் ஒயாது வருகிறது. இந்தச் சுழற்சியில் சிக்கிய ஆன்மா அனுபவிக்கும் அல்லல்கள் ஆயிரம்! ஆயிரம்! இந்த அல்லல்கள் தீர ஒரே வழி திருவாசகம் ஒதுதல்.
அல்லல் நீங்கி ஆனந்தம் அடையத் திருவாசகம் பாடுக! திருவாசகம் ஒதுக!
வாழ்க்கையாகிய நெடிய பயணத்துக்குத் துணை வேண்டுமா? தனிமைத் துன்பம் அழியத் துணை வேண்டுமா? இறைவனே கடையூழித் தனிமையிலிருந்து மீள, திருவாசகத்தைய் படி எடுத்துக் கொண்டுளான். நமது தனிமைக்கும் தனித்துணை மருந்து திருவாசகம் தான்! நமது நெடிய பயணத்துக்குரிய தனித்துணை திருவாசகம்! மாணிக்கவாசகர் பரசிவத்தின் திருவடிகளாகிய மேகத்தில் ஞானத்தை எடுத்து வந்து பெய்த ஞான மழை திருவாசகம்! திருவாசகத்தை, இராமலிங்க