பக்கம்:திருவாசகத்தேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அடிகள் கூறியவாறு "நான் கலந்து பாட" முயற்சி செய்வோம்!

திருவாசகம் ஒரு ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துகிறது. நந்தம் மூதாதையரின் உதட்டில் உலா வந்து உலாவிய பாடல்கள் திருவாசகம். அதனால்தான் போலும் அன்றைய தமிழகத்தில் ஞானம் இருந்தது. இன்றும் நமது உதடுகளில் திருவாசகம் உலா வரட்டும்! திருவாசகச் சிந்தனைகளின் வழி ஆன்மாக்கள் வளரட்டும்! அலைவு உலைவுப் போராட்டங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; ஆன்ம சுதந்திரம் பெற முதலில் சிந்திக்க வேண்டும். ஆன்ம சுதந்திரமே இறை இன்பத்திற்குப் படி.

சிவப்பிரகாச சுவாமிகள் கூறிய வேளாண்மையைச் செய்க! மாணிக்க வாசகராகிய மாமழை பொழிந்தது; திருவாசகத்தேனமுது, ஒதுபவர் மனக்குளத்தில் திருவாசகம் நிரம்பட்டும். அவர்தம் வாய்வழிப்போந்து கேட்பவர் செவி வழி மணவயலில் பரவட்டும்! அன்பாகிய வித்திலிருந்து சிவம் முளைவிடட்டும்! கருணை மலரட்டும் கருணையால் இந்த உலகம் சிறக்கட்டும்! மட்கலம் நல்லதேயானாலும் தீண்டாமையாயிற்று. தீண்டாமை இல்லாத பொற்காலமாய திருவாசகம் ஒதுவோம்!

நாளும் திருவாசகம் ஒதுவோர் நாள்தோறும் திருவாசகத்தை நினைந்து நினைந்து ஞானமழையில் நனைந்து நனைந்து உணர்வில் சிறந்து அழுவோம். இறைவனை நினைந்து அழுவதற்குரிய ஞானப்பாடல்கள் திருவாசகம். அழுகின்ற கண்களில்தான் கடவுள்தன்மை, பூரணமாகப் பரிணமிக்கிறது. ஏன்?,

தமிழ் பத்திமைக்குரிய மொழி பிரிவு துன்பத்தைத் தருவது. குருந்த மரத்தடியில் திருப்பெருந்துறை ஈசனைக் கண்டு அனுபவித்த மாணிக்கவாசகருக்கு ஈசனின் பிரிவுத் துன்பத்தில் பிறந்த தமிழ் திருவாசகம். ஆதலால்,