திருவாசகத் தேன் ☐ 23
பிரிந்து போனார். மாணிக்கவாசகர் கடவுளிடம் கொண்ட பிரிவு, திருவாசகத்தைத் தந்தது.
கடவுள் ஒருவனே! வணங்குவனவெல்லாம் கடவுள் அல்ல! கடவுள் பல இல்லை. கடவுள் பல என்ற கொள்கை ஏற்புடையதுமன்று. வானிலுள்ள தேவர்க்கு எல்லாம் கடவுள் ஒருவனே! அமரர்களுக்கு எல்லாம் ஒருவனாக, தேவர்கோ அறியாத தேவதேவனாக விளங்கும் கடவுள் வலியவந்து 'வா'வென்று அழைத்து. வான்கருணை பொழிந்த பிறகும் உடன் போகாது பின்நின்று போனதை நினைத்து நினைந்து வருந்துகின்றார்! ஒன்றை அனுபவிக் காமலே இருந்துவிடலாம்! அனுபவித்துப் பின் இழத்தல் கொடிய துன்பத்தைத் தரும். மாணிக்கவாசகர். இறைவனைக் கண்டார். அந்தம் அன்றில்லா ஆனந்தத்தைப் பெற்றார்; அனுபவித்தார். இடையில் பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனந்த அனுபவத்தில் இடையீடுபட்டுவிட்டது. இதனை மாணிக்கவாசகர் ஆற்றிக் கொள்ள இயலாமல் தவிக்கிறார். கடவுள்ளின் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலில்லாமல் அல்லற்படுகிறார். இந்த ஆற்றாமையால் தற்கொலை எண்ணம்கூட மாணிக்கவாசகருக்கு வருகிறது! "திண்வரை உருள்கிலேன்; தீயில் புக்கிலேன்" "சாகேன்" என்றெல்லாம் அலமருகிறார்; புலம்புகிறார். மீண்டும் உண்ணவே ஆசைப்படுகிறார். பசியும் உண்ணுதலும் சுழன்று வரும் தீய வட்டமாயிற்றே! எத்தனை தடவை உண்டாலும் பசி என்று நீங்கும்! ஒருப்போதும் நீங்காது: ஞானம்பெற்றால் ஒழிய உடற்பசி தணிய வழியில்லை! பிறப்பு தொடங்கிய நாள் தொட்டு உண்ட உணவுக்கு அளவில்லை! கடவுளே! இறைவா! அருள்செய்க! வருக என்றருள் செய்க வெறுமனே செத்துப்போகும்படி விட்டுவிடாதே! உன்னால் ஆட்கொள்ளப்பட்ட நான். வெறுமனே செத்துப்போனால் சிரிப்பார்கள்! இந்த அவலம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! உன் பணி