திருவாசகத் தேன் ☐ 83
யாக்கி இந்த வாழ்க்கையை சொத்தையாக்கி விட்டன. நன்னெறிப்படுத்தும் பழைய அடியாரொடும் கூடுவதில்லை. மாறாக நகர் திரிதரு நம்பியருடன் கூட்டு! வறுமொழியாளரொடு கூட்டு! வம்பப் பரத்தரொடு கூட்டு! இதனால் வாழ்நிலை பின் தங்கிவிட்டது! என்னை ஒத்தார் எங்கோ சென்று உயர்ந்து விட்டனர். நமது நிலை பின் தங்கிய நிலை. வாழ்வு பின் தங்கியது மட்டுமா? நோய்க்கு விருந்தான்னோம்!
இதிலிருந்து தப்ப என்ன வழி மானுடம் என்ற பதந்தந்த வாழ்முதலை, இறைவனை நினைந்து நினைந்து அவனுக்கு உடைமைப் பொருளாக எண்ணி அருள் பாலிக்கும் பணிகளைச் செய்து வாழ்தலே வழி! இந்த வழியில் செல்வதற்குத் திருவாசகம் துணை!
என்னால் அறியாப் பதந்தந்தாய்
யான தறிய தேகெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையர்ப் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங் கூடாது
என் காயகமே பிற்பட்டிங்கு
இருக்தேன்! கோய்க்கு விருந்தாயே!
(ஆனந்தமாலை-2)