பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

படைத்தது வானம். என்றாலும் சினம் கொள்ளவில்லை. பெருந்தன்மையோடு மன்னித்து மறந்து

ஆனால் மேகத்திற்கு வந்தது கோபம். "நான் திட்டுத்திட்டாய்ப் படை போல் இருக்கிறேனா? நான் இல்லாவிட்டால் என்ன ஆகிறதென்று பார்க்கலாம்" என்று அது சினம் கொண்டது.

ஆம் மேகத்திற்கும் கோபம் வந்துவிட்டது,

'சில ஆண்டுகள் நான் வேறோர் ஊருக்குப்போய் விடுகிறேன். அப்போது இந்தப் புற்கள் என்ன ஆகின்றன பார்க்கலாம்? என்று கூறிக்கொண்டே அது புறப்பட்டு விட்டது.

மேகம் போன பிறகு கூடப் புற்கள் வானத்தின் களங்கமற்ற அழகை ஒப்புக்கொள்ளவில்லை. 'பொலிவு மிக்க எங்களுக்கு யார் இணை!' என்று அவை தற் பெருமை பேசிக் கொண்டன.

நாட்கள் ஓடின, மாதங்கள் கடந்தன. ஆண்டுகளும் மாறி மாறி வந்தன. அயலூருக்குச் சென்ற மேகங்கள் திரும்ப வரவில்லை.

ஒருநாள் அயலூரில் இருந்த மேகங்களைப் பார்த்துக் காற்று பேசியது.

"காற்றண்ணா, ஊர் சுற்றி வரும் காற்றண்ணா உலகில் என்ன விந்தைகள் கண்டாய்?" என்று மேகம் ஒன்றுகேட்டது ப-3