வீர சுதந்திரம் 33 மூடலாம். எரியும் மலைவாயை மூட உன் ஏகாதி பத்தியத்தால் முடியாது மிஸ்டர் விஞ்ச் (வெளியில் வந்தேமாதரம்' என்று மக்கள் குரல் வானளாவ எதிரெலிக்கிறது. கலெக்டரின் தனி உதவியாளன் ஒடி வருகிருன்.) W கலெக்டர் பி. ஏ. (மூச்சு வாங்க ஓடிவந்து) சார் ஜனங்க சார், சார், விஞ்ச் : யார் ஜனங்க: தரத்து காய்களே! நடுத்தெரு விலே துரத்து. பி. ஏ. வந்தேமாதரம் சார்! வந்தேமாதரம் பத்தாயிரம் பேர் கூடிட்டாங்க சார். பயங்கரம் டேன்ஜர் சார் வந்தேமாதரம் சார்! விஞ்ச் : என்னு மேன் இது வந்தேமாதரம் இன்னுெரு தடவை அப்படிச் சொன்னே, டிஸ்மிஸ். போ. ஏன் நடுங்குறே? பி. ஏ. என்ன சார்? ஐயோ, அத்தனை பேரும் ஆபீ ஸையே தூளாக்கிடுவாங்க போலிருக்கு சார். (மக்கள் குரல் மேலும் வலுவடைந்து வந்தே மாதரம் வந்தே மாதரம், எனக் கேட்கிறது.) வ. உ. சி. சரி. நேரமாகிறது மிஸ்டர் விஞ்ச் வெளியே என் மக்கள் என்னை எதிர்பார்க்கிருர்கள். நான் புறப் பட வேண்டும். கேரமாகிறது. என்ன சமாச்சாரம்? ஏன் அழைத்தீர்? சீக்கிரம் ப்தில் சொல்லும்! " . . . في ساس، تمت . (كة
பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/35
Appearance