பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 59

நாட்டின் தென்பகுதியும் தென்கீழ்ப் பகுதியும் கடற்கு இரையான போது பேரலைப் பெருக்கால் (Tidal wave) இப்பகுதி முற்றும் கடல்நீர் புகுந்து பரவிற்று. அந்நாளில் இக்காழி நகர் ஒன்று தவிரப் பிற ஊர்கள் பலவும் நீருள் மூழ்கின. இதனை அப்பெருமான்,

“கருமை யற்ற கடல்கொள்ள

மிதந்ததோர் காலம் இது என்ன பெருமை பெற்ற பிரமாபுரம்

என்று மொழிகின்றார். கடலாற் கவரப்படாத பெருமைபற்றி இதனைப் பிரமபுரம் என்றனர். பிரமம் என்ற சொல்லெ பெருமை என்னும் பொருள் தருவது. அந்த உண்மை புலப்படவே பெருமை பெற்ற பிரமாபுரம் என்று இவ்வாறு கூறுகின்றார். இனி, இதற்குப் பொதுவாக வழங்கும் காழி என்ற பெயர், கடற்பெருக்கால் கரைக்க மாட்டாத காழ் பொருந்திய இடம் என்று பொருள்படுவதாகும். தொண்டை நாட்டுத் திருவோத்துருக்குக் கிழக்கில் உள்ள ஊர், ஒரு கால் சேயாறு பெருகி இடையி லுள்ள ஏரியின் கரையைச் சிதைத்தேகியபோது, சிதைவுறாமல் நின்ற ஊர் என்று பொருள் படக் காழியூர் எனப்பட்டது. அதன் அழியாப் பெருமை கண்ட சான்றோர், தொண்டை நாட்டுக் கோட்டங் களில் ஒன்றிற்கு அதனைத் தலைமையூராக்கிக் காழியூர்க் கோட்டம் என்றனர். “ஒள்வாழைக் கனி தேன் சொரி ஒத்துர்’, ‘குரும்பை ஆண்பனை