பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 ல் ஒளவை சு. துரைசாமி

ஈன்குலை ஒத்துரர்’ என ஞானசம்பந்தர் பாராட்டும் திருவோத்துரைப் பல்லவர் கல்வெட்டுக்கள், ‘தொண்டை நாட்டுக் காழியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டுத் திருவோத்துர்” என்று கூறுகின்றன. காழிநாடு என்றால் சீர்காழியைச் சேர்ந்த நாடென்று பொருள்படும். அதனை எண்ணியே தொண்டை நாட்டப் பண்டைச் சான்றோர், அதனைக் காழி நாடு என்னாமல் காழியூர் நாடு என்றது மிக்க மகிழ்ச்சி தருகிறது. பிற்காலத்தே சீர்காழி சிய்யாழி, ஷியாவி என ஆனது போலக் காழியூரும் காளியூர் என்றும் காலியூர் என்றும் மாறியதைக் கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், பெருநீர்க்குக் கரைந்து கெடாத காழ் உடைமை பற்றிக் காழி என்றும் காழியூர் என்றும் தமிழ் மக்கள் பெயரிட்டிருக்கும் சிறப்பை நன்கு தெளியலாம்.

திருஞானசம்பந்தர் நம் தமிழகத்தில் நெய் தலைச் சார்ந்த ஊர்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனையும் இயற்கையையும் கண்டு இன்புற்றப் பாடியுள்ளார். அவையெல்லாவற்றையும் கண்டுரைப் பதாயின் காலம் நீட்டிக்கும்; ஆதலால், இக்காழி நாட்டிலுள்ள சிலவூர்களில் ஞானசம்பந்தர் கண்ட நெய்தற் காட்சிகளைக் கூறவிரும்புகிறேன்.

1. தில்லைப் பெரும்பதிக்குக் கிழக்கில் இருப்பது திருவேட்களம்; முந்நூறு ஆண்டுகட்கு முன் அச்சுதப்ப நாயக்கர் ஆட்சியில் வேட்களம் என்ற பெயரை திருவேழ்க்களம், திருவேள்விக்களம் என