பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இது 61

மாற்றும் முயற்சியொன்று தோன்றிற்று; ஊரவர் அதனை எதிர்த்து ஞானசம்பந்தர் அருளிய வேட்கள நன்னகர் என்ற தொடரைக் காட்டி முறியடித்தனர். (கி.பி. 1666).

இவ்வேட்களத்தின் கிழக்கில் கொள்ளிடம் கடலொடு கலப்பதும் அங்குள்ள கானற் சோலை களில் பல்வகைப் புள்ளினங்கள் தங்கி ஒலிப்பதும் ஒருபாலாக, ஒருபால் வேதமுழக்கமும் வேள்வியார வாரமும் ஞானசம்பந்தரை மகிழ்விக்கின்றன. இதனை,

ஒதமும் கானலும் சூழ்தருவேலை

உள்ளம் கலந்து இசையால் எழுந்த

வேதமும் வேள்வியும் ஒவா

வேட்கள நன்னகராரே,

என்று பாடுகின்றார்.

ஒருசார் திரையெழுந்தலைக்கும் கடலும், தண்ணிய கழிகளின் நீர்ப்பெருக்கும், கரையில் நிற்கும் கானற்சோலையில் வண்டினம் பண்பாட எங்கும் மலர்மணம் கமழ்கிறது; இதனை

திரைபுல்குதெண்கடல் தண்கழி ஒதம்

தேனலங்கானலில் வண்டுபண்செய்ய விரையுல்குனபம் பொழில் சூழ்ந்த

வேட்களநன்னகராரே.

என்று பாடுகின்றார்.