பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300. இ. ஒளவை சு. துரைசாமி

என்று பாராட்டுகின்றாள். இவள், தோழியரும் பணிப் பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வன செய்து சிறப்பிக்க,

“கண் அவனையல்லாது காணா செவி அவனது எண்ணருஞ் சீரல்லது இசை கேளா-அண்ணல் கழலடியல்லது கைதொழா அஃதான்று அழலங்கைக் கொண்டான்மாட் டன்பு. - என்று ஒர் எழிலுடைய வெண்பாவை விரித்துரைக் கின்றாள். அப்போது பரமன் அமரர்குழாம் தற்சூழ மாடமறுகில் உலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மிகுந்து மனம் கரைந்து மெய் வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள். - இவ்வாறு பரமன் உலாவந்த வீதிகளில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,

“பண்ணாரும் இன்சொல் பணைப்பெருந்தோள்

செந்துவர்வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே-விண்ணோங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா விற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு’ என்று பெருமாள் வியந்தோதுகின்றார்.

இங்கே கூறிய மகளிர் எழுவருள் முதல் அறுவர், இவ்வுலகிற் காணப்படும் அறுவகை உயிர்கள் என்றும், பேரிளம் பெண் கடவுளரும் முனிவரான உயிரென்றும், இவ்வுலகங்களில் இறைவன் தன் ஐவகைத் தொழில் செய்து நிலவும் நிகழ்ச்சி கண்டு