பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 * ஒளவை சு. துரைசாமி

- “விண்ணிலே மறைந்து அருள்புரிவேதநாயகனே.

கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம்

நண்ணி நான் தொழ நயந்தருள்புரிக’ என வேண்டினார். “கயிலையில் இருந்த அம் முறைமை, பழுதில் சீர்த் திருவையாற்றிற் காண்க என இறைவன் ஆணையிட்டருளினார். அங்கே தடம்புனல் ஒன்று நாவரசர் கண்முன் தோன்றிற்று. அதன் கண் மூழ்கிய அவர் திருவையாற்றில் ஒருமலர்ப் பொய்கையிற் கரையேறினார்.

கரைக்கண் திருவையாற்றில் அவர் காண்பன

அனைத்தும் தத்தம் துணையுடன் காட்சி தருவது

- கண்டார். அதனைச் சேக்கிழார், “அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன, புடையமர்ந்ததும் துணையொடும் பொலிவன கண்டார்” எனப் புகழ்கின்றார். காண்பன பலவும் துணையொடும் பொலிதற்குக் காரணம் யாதென நினைக்கும் உள்ளத்துக்கு, . .

“பொன்மலைக் கொடியுடன் அமர் வெள்ளியம்பொருப்பின் தன்மையாம்படி சத்தியும் சிவமும் ஆம் சரிமைப் பன்மையோனிகள் யாவையும் பயில்வன” எனவுரைத்து ஆசிரியர் பெருமான் ஐயம் அறுக் கின்றார். - - - -

- திருவையாற்றுத் திருக்கோயில் நாவுக்கரசர்க்குத் திருக்கயிலையாய்த் தோற்றமளித்தது. தேவரும் மாதவரும் கயிலையிலுள்ளவாறே காட்சி தந்து இன்புறுத்தினர். உமாதேவியுடன் வீற்றிருந்த