பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 149

அன்று திருநாவுக்கரசர், இன்று தவம் பெருகு கயிலைக்குருமணியும் தம்பிரான் சுவாமிகளும் சென்று காண்பது போலக் காணும் திறம் இல்லாமை நினைக்கும் போது நெஞ்சு வருந்துகிறது. இன்றைய பெருமக்கட்கு முன்னோடியாய்க் கயிலைநோக்கிச் சென்ற நாவுக்கரசரைச் சேக்கிழார் பெருமான் “கலை வாய்மைக் காவலனார்” என்று பாராட்டியுரைக் கின்றார். -

உடல் தேய்ந்து புரண்டு செல்வதன்றி வேறு போக்கிலா நிலையில் நாவுக்கரசர் வருந்துங்கால் வேதியர் ஒருவர் தோன்றி,

“கயிலைமால் வரையாது காசினி மருங்கு பயிலும் மானுடைப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ அயில் கொள் வேற்படை அமரரும் அணுகுதற்கரிதால்” என்று சொல்லி, “மீளும் அத்தனை உமக்கு இனிக் - கடன்” என வற்புறுத்தினார். உடல் உறுப்புக்கள் தேய்ந்து குறையினும் உள்ளமும் ஊக்கமும் ஒரு சிறிதும் குறையாத நாவுக்கரசர், -

- “ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்

மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” எனத் தமது மனக்கோளைத் திண்மையுடன் எடுத்தியம்பினார். சிறிது போதில் விண்ணில் ஒரு குரல் எழுந்து, “ஓங்கு நாவினுக்கு அரசனே, எழுந்திரு” எனப் பணித்தது. நாவரசரும் மறாது பணிந்த வுள்ளத்தராய், -