உள்ளடக்கத்துக்குச் செல்

இறையனார் அகப்பொருள்/கற்பியல்

விக்கிமூலம் இலிருந்து

கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த உரை பத்தாம் நூற்றாண்டில் எழுத்துருவம் பெற்றது என்பது ஒரு கோட்பாடு.

விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

இறையனார் அகப்பொருள்/கற்பியல்

[தொகு]

ஆசிரியர் இறையனார்

[தொகு]

(ஆலவாய் அண்ணல் இயற்றிய அருந்தமிழ் அகஇலக்கணம்)

[தொகு]

இரண்டாவது 'கற்பியல்' (நூற்பா 34 முதல் 60 முடிய)

[தொகு]

நூற்பா 34 (கற்பினுட்)

[தொகு]
கற்பினுட் டுறவே கடிவரை யின்றே. (01)


(இச்சூத்திரம், கற்புக்காலத்துப் பிரிதல் கூறியது)


நூற்பா 35 (ஓதல் காவல்)

[தொகு]
ஓதற் காவற் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
றாங்கவ் வாறே யவ்வயிற் பிரிவே. (02)


(இச்சூத்திரம், பிரிவின் பெயர் முறை தொகை உணர்த்தியது.)


நூற்பா 36 (அவற்றுள்)

[தொகு]
அவற்று,
ளோதலுங் காவலு முயர்ந்தோர்க் குரிய. (03)


(இச்சூத்திரம், முன்புகூறிய பிரிவு இரண்டும் இன்னார்க்குரிய எனக்கூறியது.)

நூற்பா 37 (வேந்துவினை)

[தொகு]
வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே. (04)


(இச்சூத்திரம், பார்ப்பார்க்கும் உரியதொரு பிரிவினை உணர்த்தியது.)


நூற்பா 38 (அரசரல்லா)

[தொகு]
அரச ரல்லா வேனை யோர்க்கும்
புரைவ தென்ப வோரிடத் தான. (05)
(இச்சூத்திரம், ஏனையோர்க்கும் உரியது வேந்துவினை என்று கூறியது.)


நூற்பா 39 (வேந்தர்க்)

[தொகு]
வேந்தர்க் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்
றாங்க விரண்டு மிழிந்தோர்க் குரிய.(06)


(இச்சூத்திரம், வேந்தர்க்குத்துணையாகப்பிரியும் பிரிவு,பொருட்பிரிவு ஆகியவற்றிற்கு உரியார் இவர் எனக்கூறியது.)


நூற்பா 40 (காதற்)

[தொகு]
காதற் பரத்தை யெல்லார்க்கு முரித்தே.(07)


(இச்சூத்திரம், பரத்தையிற் பிரிவுக்குரியார் இவர் எனக்கூறியது.)


நூற்பா 41 (பிரிவினீட்டம்)

[தொகு]
பிரிவி னீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க்
குரிய தன்றே யாண்டுவரை யறுத்தல். (08)


(இச்சூத்திரம், பிரிவின் காலவரையறை உணர்த்துதல் பற்றிக்கூறியது.)

நூற்பா 42 (பரத்தையிற்)

[தொகு]
பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே. (09)


(இச்சூத்திரம், பரத்தையிற்பிரிவின் தன்மை கூறியது.)


நூற்பா 43 (பரத்தையிற்பிரிந்த)

[தொகு]
பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி
பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறைத லறத்தா றன்றே. (10)


(இச்சூத்திரம் தலைமகள் பூப்புக்காலத்துப் பரத்தையிற்பிரிந்த தலைமகன் ஒழுகலாறு கூறியது.)

நூற்பா 44 (கற்பினுட்)

[தொகு]
கற்பினுட் பிரிந்தோன் பரத்தையின் மறுத்தந்
தறப்பொருள் படுப்பினும் வரைநிலை யின்றே. (11)


(இச்சூத்திரம், மேலதற்குப் புறனடை உணர்த்தியது.)


நூற்பா 45 (புகழுங்)

[தொகு]
புகழுங் கொடுமையுங் கிழவோன் மேன. (12)


(இச்சூத்திரம்,தலைமகனுக்குரியதான ஒரு பண்பினை உணர்த்தியது.)

நூற்பா 46 (கொடுமை)

[தொகு]
கொடுமை யில்லைக் கிழவி மேற்றே. (13)


(இச்சூத்திரம், தலைமகளது பெருமை உணர்த்தியது.)


நூற்பா 47 (கிழவோன்)

[தொகு]
கிழவோன் முன்னர்க் கிழத்தி தற்புகழ்தற்
புலவிக் காலத்துப் புரைவ தன்றே. (14)


(இச்சூத்திரம் புலவிக்காலத்துத் தலைவியின் குணம் கூறியது.)


நூற்பா 48 (நாடும்)

[தொகு]
நாடு மூரு மில்லுஞ் சுட்டித்
தன்வயின் கிளப்பின் புலவிப் பொருட்டே. (15)
(இச்சூத்திரம், புலவிநிமித்தம் இதுவெனக் கூறியது.)


நூற்பா 49 (அவன்வயிற்)

[தொகு]
அவன்வயிற் கிளப்பின் வரைவின் பொருட்டே. (16)


(இச்சூத்திரம், தலைவிகூற்றின் ஒருதன்மை உணர்த்தியது.)


நூற்பா 50 (உணர்ப்புவயின்)

[தொகு]
உணர்ப்புவயின் வாரா வூடல் தோன்றின்
புலத்தல் தானே கிழவற்கும் வரையார். (17)


(இச்சூத்திரம், தலைமகளுக்குரிய ஊடல் தலைமகனுக்குமுரிய இடம் இது எனக் கூறியது.)


நூற்பா 51 (நிலம்பெயர்ந்)

[தொகு]
நிலம்பெயர்ந் துறையும் நிலையியல் மருங்கின்
களவுறை கிளவி தோன்றுவ தாயின்
திணைநிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார். (18)


(இச்சூத்திரம், கற்புக்காலத்துத் தலைமகனுக்கு உரியதோர் இலக்கணம் உணர்த்தியது.)


நூற்பா 52 (நிலம்பெயர்ந்துறை)

[தொகு]
நிலம்பெயர்ந் துறையு மெல்லாப் பிரிவு
மொழிந்தோ ரறியவு மறியா மையுங்
கழிந்துசேண் படூஉ மியற்கைய வென்ப. (19)


(இதுவுமது)


நூற்பா 53 (எல்லா)

[தொகு]
எல்லா வாயிலுங் கிழவோன் பிரிவயின்
பல்லாற்றானும் வன்புறை குறித்தன்று. (20)


(இச்சூத்திரம், பிரிவினைப் பொறுக்காத தலைவியை வாயில்கள் ஆற்றுவிப்பதைக் கூறியது.)


நூற்பா 54 (வன்புறை)

[தொகு]
வன்புறை குறித்த வாயி லெல்லா
மன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற்
சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். (21)
(இச்சூத்திரம், சிறைப்புறத்தில் கூறி உணர்த்தும்முறை கூறியது.)


நூற்பா 55 (சிறைப்புறங்)

[தொகு]
சிறைப்புறங் குறியா தோன்றலு முளவே
யவற்புணர் வறியுங் குறிப்பி னான. (22)


(இச்சூத்திரம் தலைமகனது வரவுசொல்லி ஆற்றுவிக்கும்முறை கூறியது.)


நூற்பா 56 (திணையே)

[தொகு]
திணையே கைகோள் கூற்றே கேட்போ
ரிடனே கால மெச்ச மெய்ப்பாடு
பயனே கோளென் றாங்கப் பத்தே
யகனைந் திணையு முரைத்த லாறே. (23)


(இச்சூத்திரம், அகப்பாட்டுக்குரிய பத்திலக்கணம் உணரத்தியது.)


நூற்பா 57 (அவற்றுள்)

[தொகு]
அவற்று,
ளெச்சமுங் கோளு மின்மையு முரிய. (24)


(இச்சூத்திரம், எச்சமும் கோளும் இல்லாமலும் பாட்டு வரும் என்று கூறியது.)

நூற்பா 58 (சொல்லே)

[தொகு]
சொல்லே குறிப்பே யாயிரண் டெச்சம். (25)


(இச்சூத்திரம், எச்சம் இருவகைப்படும் என்றது.)


நூற்பா 59 (முற்படக்)

[தொகு]
முற்படக் கிளந்த பொருட்படைக் கெல்லா
மெச்ச மாகி வரும்வழி யறிந்து
கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. (26)
(இச்சூத்திரம், இங்குக் கூறாதவற்றிற்கு மேல்வரினும், கூறிய இலக்கணங்கொண்டு உணர்ந்துகொள்க என்றது.)


நூற்பா 60 (களவுகற்பென)

[தொகு]
களவு கற்பெனக் கண்ணிய வீண்டையோ
ருளநிக ழன்பி னுயர்ச்சி மேன. (27)


(இச்சூத்திரம், களவுகற்புகட்குப் புறனடை உணர்த்தியது.)


இரண்டாவதான 'கற்பியல்' முற்றும்

[தொகு]

மதுரை ஆலவாய்ப்பெருமான் அடிகளால் செய்யப்பட்ட

[தொகு]

'களவியல்' என்னும் 'இறையனார் அகப்பொருள்' மூலம் முற்றியது.

[தொகு]
இறையனார் அகப்பொருள்/களவியல்
[[]] :[[]] :[[]]