பக்கம்:முருகன் அந்தாதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பாடற்ற மோனக் களிதேக்கி

யாடப் பணிக்கின்றனன்

கூடற்ற புள்ளுறை மாமரு

தாசலக் கொற்றவனே.  (39)


தவம்நேர்ந் திலன்மறை தேர்ந்திலன்

அஞ்சு தகைந்திலன்மேற்.

பவம்நெர் வதற்கு மருந்தே

தெனஎண்ணிப் பார்க்கிலன்யான்

சிவம்நேர் பவன்முரு கன்மரு

தாசலம் சேர்ந்துருகி

நவம்நேர் உணர்வு பெறுதலொன்

றேஇன்று நாடினனே.  (40)


நாடித் திரிந்து பலதலம்

மேவி ன்றும்புனலில்

ஆடித் துளைந்து செபஞ்செய்து

சான மதிலமர்ந்து

39. ஈட்டம் - சேர்ந்த பிழம்பு. பாடு, அற்ற - ஒலியற்ற. கூடற்ற புள்-இயற்கையாகப் பறக்கும் பறவைகள்.

40. நேர்ந்திலன் - செய்யவில்லை. அஞ்சு-ஐம்பொறிகள். தகைந்திலன்-யான் தடுக்கவில்லை. பவம் கேர்வதற்கு-பிற்வியை எதிர்வதற்கு. நேர்பவன்-ஒப்பவன். நவம்கேர்-புதுமையையுடைய.