பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


"ஆம் அம்மா, பத்து நாளாகத் தேடிக் கொண்டி ருக்கிறோம்" என்று சொன்னது பச்சைக்கிளி,

'மகளே, உன்னை வளர்த்த அம்மாவின் பெயர் என்ன?"என்று கேட்டாள் அந்த அம்மா "தங்கம்மாள்?’ என்றாள் முத்துமணி. ஐயோ! நான் தான் உன்னைப் பெற்றெடுத்து விற்ற பாவி!' என்று சொல்லி முத்துமணியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவென்று அழுதாள் அந்த அம்மா.

"ஆ! நீங்கள் தான் என்னைப் பெற்ற அம்மாவா! அம்மா, அம்மா உங்களைத் தேடிக் கண்டு பிடித்து விட்டேன்?’ என்று மகிழ்ச்சியோடு கூவினாள் முத்து மணி,

"என் தங்க மகளே, வா வீட்டுக்குப் போவோம் "என்று முத்துமணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனாள் கண்ணம்மாள். பச்சைக்கிளியும் அவர்கள் கூடச் சென்றது. கண்ணப்பரும் தன் மகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

முத்துமணி கண்ணம்மாளிடம், பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் தன்னைக் கேலி செய்ததையும், தான் அம்மாவைத் தேடிப் புறப்பட்டதையும் கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே வீட்டுவாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அந்த வண்டியிலிருந்து ஒரு வேலைக்காரன் இறங்கி வந்தான்.