பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கொக்கும் மீனும்

ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது.

அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்கு நினைவுக்கு வந்தன. "கொக்குகள் நிற்கும் இடத்தைக் கண்டால் அங்கே போகாதே, அவை மீன்களைப் பிடித்துத் தின்றுவிடும்" என்று அது கூறியிருந்தது. எனவேதான் அந்தக் கொழுத்த மீன் கொக்கைக் கண்டவுடன் பயந்து நின்று விட்டது.

ஆனால், அதைக்காட்டிலும் சிறிய மீன்களெல்லாம் சிறிதும் அச்சமில்லாமல் மடைவாய் வழியாகச் சென்று கொண்டிருந்தன. கொக்கு நிற்பதைப் பற்றி அவை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள் தன்னைக் கடந்து செல்வதை அந்தக் கொக்கு கவனித்ததாகவும் தெரியவில்லை. அது சும்மா நின்று கொண்டிருந்தது.

அந்தக் கொழுத்த மீன் குஞ்சு சிறிது நேரம் நின்று பார்த்தது. இந்தக் கொக்கு ஏமாளிக் கொக்கு