பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெருமாளும் சதாசிவமும்

ர் ஊரில் சதாசிவம் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு அண்ணன்மார் இருவர்; தம்பி ஒருவன். தந்தை இறந்தபின் உடன் பிறந்தவர்கள் அவர் தேடி வைத்த செல்வத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டனர். தந்தையின் செல்வத்தில் ஒவ்வொருவனுக்கும் கால் பங்குதான் கிடைத்தது.

அதே ஊரில் பெருமாள் என்ற ஒருவன் இருந்தான். அவன் சதாசிவத்தின் நண்பன். அவனுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை. அவன் தந்தை சதாசிவத்தின் தந்தையளவு செல்வம் படைத்தவர் அல்லர். இருந்தாலும் அவர் தேடி வைத்த செல்வம் முழுவதும் பெருமாளுக்கே உரிமையாயிற்று. ஆகையால் பெருமாள் சதாசிவத்தைக் காட்டிலும் பெரும் பணக்காரனானான்.

பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் சதாசிவத்துக்குத் தான் குறையுடையவன் என்ற எண்ணம் தோன்றும்.

பெருமாளைப் போல் தனி மகனாகப் பிறந் திருந்தால் தனக்குத் தன் தந்தையின் செல்வம் முழுவதும் சேர்ந்திருக்கும். தான் பெரும் பணக்காரனாகியிருக்க முடியும் என்று எண்ணினான் சதாசிவம்.

ந.சி.1-3