இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அக்கரைக்குச் செல்லு திந்த
அன்னப் படகு
ஆற்றுவெள்ளம் தாண்டுதிந்த
அன்னப் படகு!
அக்கரைக்கும் இக்கரைக்கும்
வணிகம் வளர
ஆக்கப்பணி செய்யுதிந்த
அன்னப் படகு!
அறியாமை போக்க வந்த
அன்னப் படகு!
அயலும் உறவும் கூடச்செய்த
அன்னப் படகு!